ஒன்றுக்கு பலமுறை காதலரிடமிருந்து விலகிச்செல்வது பற்றிய முடிவை பெண்கள் எடுப்பதற்கு முன்னால் யோசிக்கவேண்டும். யோசித்து அந்த முடிவை எடுத்துவிட்டால், தைரியமாக அதனை மேற்கொள்ள வேண்டும். காதல் சுகமானது என்றாலும் காதலன் மோசமானவர் என்பது தெரிந்தால், அவரிடமிருந்து விலகிச்செல்லத்தான் ஆகவேண்டும். அதே நேரத்தில் அந்த விலகல், கூடுதலாக எந்த பிரச்சினையையும் உருவாக்கிவிடாத அளவுக்கு அதில் இருந்து பக்குவமாக விடுபடவேண்டும்.
பெண்களுக்கு பொதுவாக காதலனிடம் பிடிக்காதது என்னென்ன விஷயங்கள் இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?
அதிக சுயநலம் கொண்டவராகவும்,சோம்பேறியாகவும் இருந்தால் பெண்களுக்கு பிடிக்காது. தனது அன்பை துச்சமாக மதித்து அலட்சியம் காட்டுபவரையும் பெண்கள் விரும்புவதில்லை. முதல் பார்வையில் வந்த ஈர்ப்புக்கும், பழகிய அனுபவத்தில் கிடைத்த புரிதலுக்கும் வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி கருத்துமோதல் வந்தால், அந்த காதலை தொடர்வது பற்றி பரிசீலித்துதான் ஆகவேண்டும்.
காதலினிடம் ஒழுக்க அளவிலான குறைபாடுகளை காணும்போது அவரிடம் காதலை தொடர முடியாது. உங்களைப் போலவே மற்ற பெண்களிடமும் காதல் வலை வீசும் ஆண்களின் தொடர்பை உடனே நிறுத்துவது நல்லது. அதுபோலவே நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, உடல்ரீதியான தொடர்புக்கு வலியுறுத்தும் காதலரிடமும் எச்சரிக்கை தேவை. ‘என்மேல் உனக்கு நம்பிக்கையில்லையா?’ என்று பேச்சில் தூண்டில் போடும் காதலர்களில் பலர், உடல் தொடர்புக்கு பின்னர் காதலை உதறித் தள்ளிவிட்டு போன சம்பவங்கள் நிறைய நடக்கின்றன . இதுபோல் பெண்களை தவறாக பயன்படுத்தும் எண்ணத்துடன் பழகும் காதலர்களிடம் இருந்து விலகிவிடுவதும் நல்லது.
காதலரிடமிருந்து பிரிந்து செல்லும் பெண்கள் முடிவை எடுப்பதற்கு முன்னால் ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவேண்டும். யோசித்து அந்த முடிவை எடுத்துவிட்டால், தைரியமாக அதனை செயல்படுத்த வேண்டும். அந்த முடிவை அவரிடம் தெரிவித்த பின்பு அவரது பதில்களையும், உணர்வுகளையும் உற்று நோக்குவது அவசியம். அதிக உணர்ச்சிவசப்படுபவராக இருக்கிறாரா? கோபமும், பழிவாங்கும் உணர்வுடன் செயல்படுகிறாரா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
அவர் முரட்டுத்தனமான நபராக இருந்தால் அவரை மரியாதைக் குறைவாக பேசிவிடக்கூடாது. அவரது ‘ஈகோவை’ தூண்டிவிடும் வகையிலும் நீங்கள் நடந்துகொள்ளக்கூடாது. அப்படிப்பட்டவரிடம் ‘நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்’ என்று சொல்வதற்குப் பதிலாக, ‘நீங்கள் அப்படி நடந்து கொள்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை’ என்று கூற வேண்டும். பக்குவமான வார்த்தைகளை நிதானமாக பேச வேண்டும். அதே நேரத்தில் பேச்சில் தன்னம்பிக்கையும், தெளிவும் இருப்பது அவசியம். இதுபற்றி மனோதத்துவ நிபுணர்கள் தரும் ஆலோசனையை கேட்போம்!
காதலருடனான தொடர்புகளை ஒரேயடியாக நிறுத்தாமல் மெல்ல மெல்ல நிறுத்தி கொள்ளலாம். அவரது செல்போன் அழைப்புகளை முற்றிலும் துண்டித்து விடாமல், அவருக்கே புரியும் விதத்தில் தவிர்க்கலாம். நேரடி சந்திப்புகளுக்கு முடிவு கட்டிவிடலாம். சந்தித்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டால், பொது இடங்களில்,சில நிமிடங்கள் பாதுகாப்பான இடங்களில் சந்தித்துவிட்டு, நெருக்கமான விஷயங்களை விவாதிப்பதை தவிர்த்து விட்டு விலகிவிட வேண்டும். பின்னர் அந்த சந்திப்புகளையும் படிப்படியாக வெவ்வேறு காரணங்களை கூறி தவிர்த்துவிடலாம். காதலரின் வற்புறுத்தலுக்கு இணங்கி எங்கும் தனியே சந்திக்க செல்ல வேண்டாம். நீங்கள் காதலை முறித்துக்கொள்வது பற்றி உங்கள் பெற்றோரிடம் கூறி, அவர்களது ஆதரவோடு உங்கள் திட்டத்தை செயல்படுத்துங்கள்” என்கிறார்கள்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News