பயனாளர்களின் தனியுரிமை தொடர்பான புதிய கொள்கைகளை அமல்படுத்துவதற்கு வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இச்செயலியை கைவிட்டு புதிய செயலிகளை நோக்கிப் பயனாளர்கள் பலா் படையெடுத்தனர். அதையடுத்து, புதிய கொள்கைகள் அமலாக்கத்தை நிறுத்தி வைப்பதாக வாட்ஸ்அப் அறிவித்தது. புதிய கொள்கைகளைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசும் வாட்ஸ்அப்பின் வலியுறுத்தியிருந்தது.
பயனாளர்களின் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பான சட்டத்தை இயற்றுமாறு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதன் அடிப்படையில், தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவைக் கடந்த 2019-ஆம் ஆண்டில் மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், நாட்டு மக்களின் தரவுகள் அனைத்தும் சிறப்பாக பாதுகாக்கப்படும்.
இச்சட்டம் அமலுக்கு வந்தால், புதிய கொள்கைகளை வாட்ஸ்அப் நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, தனியுரிமை தொடர்பான புதிய கொள்கைகளை அமல்படுத்தக் கூடாது என வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.