பேண்ட் சர்ச்சையில் சிக்கிய தமன்னா – மறந்துட்டீங்களா??

தென்னிந்திய சினிமாவின் மில்கி பேபி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கேடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு பிறகு பெரிதாக படவாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு திரையில் அறிமுகமானார். அங்கு இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதையடுத்து தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி ஹீரோயினாக வளம் வந்தார்.
அதே வேகத்தில் தமிழ் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து சூர்யா, விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில், தமன்னா நடித்து வெளியான வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மீண்டும் அதே மாதிரியான கதையில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறாராம்.இந்நிலையில், சமீபத்தில் வானவில்லை கொண்டு போட்டோஷூட் மற்றும் தெலுங்கில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் விழாவில் தமன்னாவின் காஸ்டியூம் மற்றும் அவரது அழகு ரசிகர்களை கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும். தற்போது தமன்னா ஒரு விழாவிற்கு அணிந்து வந்த ஆடை அனைவரையும் ஆச்சிர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த விழாவிற்கு கோட் போன்ற உடையை அணிந்து கீழே பேண்ட் அணியலாம் வந்திருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளபக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இதே போன்ற ஒரு கோட் ஆடையை சமீபத்தில் நடிகை ராஷ்மிகா அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com