ஒப்போ நிறுவனத்தின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒப்போ ஏ 74 என்ற மாடல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில், இந்த போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதில், 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080×2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஓ எஸ் 11.1 வழங்கப்படுகின்றன.
மேலும் 48 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் அதில் அமைந்திருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதையடுத்து இந்த மாடல் முதலில் தாய்லாந்தில் வெளியிட்டுள்ளனர். அங்கு இந்த போனின் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 21000 ஆக விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் அதன் மதிப்பு ரூ. 20000 விற்பனை விலை நிர்ணயிக்க படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏ 74 மாடல் கருப்பு மற்றும் நீல நிறம் கலந்தது போன்றும் அடுத்து ஸ்பெஸ் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News