கட்டணம் தள்ளுபடி உடன் இனி இந்த சான்றிதழ்களை டிஜிலாக்கெரில் பெற்றுக்கொள்ளலாம்…!!

என்.சி.டி.இ வழங்கிய ஓடிபிஆர்எம்எஸ் சான்றிதழ்களைப் பெறுவதற்கான பதிவு கட்டணம் ரூ .200 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், Online Teacher Pupil Registration Management System என்று அழைக்கப்படும் ஆன்லைன் ஆசிரியர் மாணவர் பதிவு மேலாண்மை அமைப்பு சான்றிதழ்களை டிஜிலாக்கருடன் இணைக்க கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

 

 அந்த வகையில் ‘நிஸ்தா’ திட்டத்தின்’ படி ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழங்கிய சான்றிதழ்கள் தானாக டிஜிலாக்கருக்கு மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேசிய கவுன்சிலின் (என்.சி.டி.இ) இணையதளத்தில்https://ncte.gov.in/website/DigiLocker.aspx மற்றும் டிஜிலாக்கர் https: // digilocker.gov.in/ பயன்பாட்டின் மூலம் சான்றிதழ்களை எடுத்துக்கொள்ளலாம்.

டிஜிலாக்கர் ஆப்பை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஓடிபிஆர்எம்எஸ் சான்றிதழ்களைப் பெறுவதற்கு செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் ரூ. 200 இதன் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com