Categories: Health

கர்ப்பிணிகளுக்கு ஏன் கை , கால் வீக்கம் உண்டாகிறது?

கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அவற்றில் ஒன்று, கைகால் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கம். கர்ப்பகாலத்தின் ஐந்தாவது மாதத்திலிருந்து சில பெண்களுக்கு கைகள், முகம், பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம். இதனால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்று கர்ப்பிணிகள் வீண் பயம்கொள்ளத் தேவையில்லை.

கர்ப்பகால வீக்கத்துக்கான காரணங்கள் :

* பொதுவாக கர்ப்பகாலத்தில் உடலின் ரத்த ஓட்டத்தின் அளவும் நீர்ச்சத்தின் அளவும் வழக்கத்தைவிட 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும். இதனால் கூட உடல் உறுப்புகள் வீக்கமடைவதற்குக் காரணமாக அமையலாம்.
* கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் எடை அதிகரிக்கும்போது கர்ப்பப்பை பெரிதாகிறது. கர்ப்பப்பையின் அருகில் உள்ள ரத்தக்குழாய்கள் அழுத்தத்துக்கு உள்ளாகி,
ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது சருமத்தின் அடியில் நீர் கோத்துக்கொண்டு வீக்கம் ஏற்படுகிறது.
* கர்ப்பக்காலத்தில் ரத்த அழுத்தம் அதிகமாகும் போது வீக்கம் ஏற்படலாம்.
* கர்ப்பிணிகளின் ரத்தத்தில் உப்புச் சத்து அதிகரிக்கும் போது வீக்கம் ஏற்படலாம்.
* அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பது, கைகால்களை அசைக்காமல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருந்தாலோ வீக்கம் ஏற்படலாம்.
* பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு உடலில் ஏற்படும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடுகளால் கூட வீக்கம் ஏற்படுகிறது.
மருத்துவரின் ஆலோசனைப்படி எளிமையான உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள்  செய்யலாம். இதய நோய் , சிறுநீரக கோளாறுகள் போன்ற உடல்நலக்குறைவால் வீக்கம் என்றால் அதற்குரிய சிகிச்சையை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Uma

Recent Posts

வெங்காயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

தினசரி நாம் சமையலில் பயன்படுத்தும் வெங்காயம் சுவைக்கு மட்டும் அல்ல அதன் மருத்துவப்பலன்களால் தான் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். *…

15 mins ago

மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் பற்றி பார்ப்போம்!

*குடும்பத்தில் ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால்,உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது. *ஏற்கெனவே…

38 mins ago

தினமும் ஆறு சுவையும் உள்ள உணவை சாப்பிடுங்கள்!

அறுசுவைகள் நாம் உண்ணும் உணவு விருந்தாகவும் அதே சமயம் மருந்தாகவும் இருக்க வேண்டும். அறுசுவைகள் இனிப்பு - sweet புளிப்பு …

58 mins ago

கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கும் இன்சுலினுக்கும் தொடர்பு உண்டா?

கர்ப்பப்பையில் கட்டி என்பது சர்வசாதாரணமாக எல்லா பெண்களுக்கும் வரும் என்றாலும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை கர்ப்பப்பையில் நீர்க்கட்டி வருவதற்கு ஒரு காரணமாகிறது…

2 hours ago

Executive மற்றும் Sr . Executive பதவிக்கு வேலைவாய்ப்பு – 2021

Executive மற்றும் Sr.Executive பணிக்கு IRCTC எனப்படும் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் பணியாளர்களை நியமிக்க…

3 hours ago

SI மற்றும் Accounts officer பதவிக்கு வேலைவாய்ப்புகள் – 2021

Sub Inspector, Accountant மற்றும் Accounts Officer பணிகளுக்கு இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் பணியாளர்களை…

5 hours ago