அப்பென்டிசைட்டிஸ் என்றால் என்ன? தெரிந்துகொள்ளுங்கள்!

பொதுவாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூறுவது வயிற்றில் வலி என்பது தான். வயதும் , சூழலும் தான் நோயின் தீவிரத்தை உணர்த்தும்.
வயிற்று வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட அறிகுறிகள் தென்படும் வயிறுவலி என்றால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
வயிற்று வலிக்கு வாயுக்கோளாறு அல்லது அல்சர் இவைதான் காரணமாக இருக்கும் என்பது பலரின் எண்ணமாக இருக்கும். ஆனால், அப்பென்டிசைட்டிஸ் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அப்பென்டிசைட்டிஸ் அறிகுறிகளை தெரிந்துகொள்வோம்.
சிறுநீரக கல் ஏற்படும் போது வரும் அறிகுறிகளும், அப்பென்டிசைட்டிஸ் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும.

அப்பென்டிசைட்டிஸ் என்றால் என்ன?

அடிவயிற்றின் வலது பக்கத்தில், இடுப்பு எலும்புக்கு மேலே, சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில், சிறிய விரல் அளவு இருக்கும் ஓர் உறுப்பு இருக்கும் அதுதான் குடல்வால் (appendix). இதில் ஏற்படும் நோய் தொற்று, தேவையில்லாத கட்டி அல்லது கல் ஆகியவற்றுக்கு அப்பென்டிசைட்டிஸ் என்று பெயர்.
அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்தபோதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால்தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.
மனிதனின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இவற்றில் நன்மை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு. தீமை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு.

அப்பன்டிக்ஸ் எவ்வாறு ஏற்படுகிறது?

அப்பென்டிக்ஸ் குழாயில் அடைப்பு ஏற்படுவதால்தான் இது ஏற்படுகிறது. ஆனால் கல்லினால் அல்ல. மலத்துகள்கள், குடற் புழுக்கள், அல்லது கட்டிகள் பொதுவாகத் தடையை ஏற்படுத்தும். இதனால் அதில் சுரக்கும் திரவம் வெளியேற முடியாது தடைப்பட்டு வீங்கும். அத்துடன் அதில் கிருமித் தொற்று ஏற்பட்டு அழற்சியடையும்.

அப்பென்டிசைட்டிஸ் அறிகுறி:

வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மலச்சிக்கல், பசியின்மை, தொப்புளை சுற்றி அல்லது வயிற்றின் வலது கைப்பக்கத்தின் அடிப்பாகத்தில் கடுமையான வலி போன்றவை ஏற்படும். அந்த பகுதியை அழுத்தும்போதோ, ஆழமாக சுவாசிக்கும்போதோ, அசையும்போதோ வலி அதிகரிக்கும். இருமல் அல்லது தும்மல் வரும்போது வயிற்றில் வலி ஏற்படும். கடுமையான வயிற்று வலியுடன் அடிக்கடி வயிற்றுப்பிடிப்பும் ஏற்படும். இதற்கு தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் மருத்துவம் நோயின் கடுமை அதிகமாகி குடல் வால் வெடித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பது மருத்துவர்கலின் கூற்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course