தேங்காய் இல்லாமல் நமது சமையல் நிறைவு பெறுவது இல்லை. சமையலுக்கு என தேங்காயை உடைக்கும் போது நிறைய பேர் தேங்காய் நீரை வீணாக்குவது உண்டு. இனிமேல் ஒரு தம்ளரோ அல்லது அதற்கு குறைவாகவோ இருந்தாலும் தேங்காய் நீரை வீணாக்காமல் பருகுங்கள்.இளநீருக்கும் தேங்காய் நீருக்கும் சிறிது வேறுபாடு உண்டு.
தேங்காய் நீர் ஏன் நல்லது?
தேங்காய் நீரில் கலோரிகள் குறைவாக இருந்தால் கூட. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. ஏனெனில் தேங்காய் நீரில் உள்ள நுண்ணூட்டச்சத்துகள் உடலுக்கு உடனடி ஆற்றல் தருகிறது.
தேங்காய் நீரில் இத்தனை சத்துக்களா?
தேங்காய் நீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், பி-6, பி12 வைட்டமின்கள், வைட்டமின் சி மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்து உள்ளது.
தேங்காய் நீர் ஃபோலேட் வகையில் சேருமா?
*இயற்கையிலே ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகளை ஃபோலேட் என்று வகைப்படுத்துவோம்.
*பாஸ்படேஸ், டையஸ்டேஸ் போன்ற என்சைம்கள் மற்றும் போலிக் அமிலம் தேங்காய் நீரில் இருக்கின்றது.
*இவையெல்லாம் உணவு செரிமானத்தை தூண்டுகிறது. வயிற்று போக்கு, காலரா போன்ற நோயின் தாக்கத்தால் ஏற்படும் உடல் வறட்சி மற்றும் சோர்விற்க்கு தேங்காய் நீர் ஒரு சிறந்த பானம்.
*உடலில் இழந்த எலக்ட்ரோலைட் அதாவது தாதுக்களை இழந்தால உடனடியாக தேங்காய் நீரை பருகுவது சோர்வு மற்றும் வறட்சியில் இருந்து மீட்கிறது. இதன் மூலம் உடல் நிலை சமன்நிலை அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.
சரும பராமரிப்பில் தேங்காய் நீர்:
சைட்டோக்கைனின் மற்றும் லோரிக் அமிலம் ஆகிய இரண்டிற்கும் சருமத்திற்கு வயதாவதால் வரும் தோல் சுருக்கம் போன்றவற்றை
தடுக்கும் குணங்கள் உள்ளது.
தேங்காய் நீர் சருமத்தின் pH நிலையை சமன் செய்கிறது. தேங்காய் நீர் உடலின் பளபளப்பை மீட்டு தருகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
எலும்புகளுக்கு வலு சேர்க்கும்:
தேங்காய் நீரில் பாஸ்பரஸ்,கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் எலும்புகள் திடமாகவும் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தேங்காய் நீரில் சர்க்கரையின் அளவு மிக குறைவாக உள்ளது. இதன் கலோரிகளும் குறைவாக உள்ளதால் நீரழிவு நோயாளிகளும் இதனை பருகி பலன் அடையலாம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News