Categories: Health

வெரிகோஸ் வெயின் நோய் வராமல் தடுக்க முடியுமா?

நீண்ட நேரம் நின்று கொண்டு பணிசெய்பவர்களுக்கு அவர்களது முழங்காலுக்கு கீழ் நரம்புகள் புடைத்து , சுருண்டு இருப்பின் அதுவே வெரிகோஸ் வெயின் நோய் எனப்படும்.

வெரிகோஸ் வெயின் அல்லது நரம்புச்சுருட்டல் பாதிப்புகள்:

கால் ரத்தக் குழாய்கள்  சுருண்டு, வீக்கம் அடைந்து, புடைத்து வெளியே தெரியும். தாள முடியாத வலி இருக்கும். கால்கள் வீங்கிக்கொள்ளும். ரத்த நாளங்கள் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படும். இரத்த நாளங்களின் வெடிப்பால், இரத்தம் உறைந்து கட்டியாகி, அப்பகுதிகளில் வலி மற்றும் சருமம் சிவந்து காணப்படும். மிக நுண்ணிய அளவில் காணப்படும் உறைந்த இரத்தத் துளிகள், இரத்தத்தோடு கலந்து உடலில் பரவும்போது, உடலில் பல்வேறு முக்கியமான உடல் உறுப்புகளில், இரத்த அடைப்பை உண்டாக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இவற்றை ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே மூலம் அறிய முடியும்.

அலோபதியில் சிகிச்சை:

ஆங்கில மருத்துவ முறைகளில், வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்ட கால்களில், நீண்ட காலுறை போன்ற கவசத்தை அணிய, பரிந்துரைக்கிறார்கள். தொடைப்பகுதியில் நரம்புகள் சுருண்டு காணப்பட்டால், அவற்றை அறுவைசிகிச்சையின் மூலமும், பாதிக்கப்பட்ட இரத்த நாளத்தை, உடலிலிருந்து இருந்து அகற்றுவதன் மூலமும் ஓரளவுக்கு வலி குணமாகும் ஆயினும் மீண்டும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

வெரிகோஸ் வெயின் நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

*உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பது , நீண்ட நேரம் நின்று கொண்டு இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

*எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது நல்லது.

*தொடைகளை இறுக்கிப்பிடிக்கும் ஆடைகளை அணியக் கூடாது.

*தளர்ந்த ஆடைகளையே அணிய வேண்டும்.

*எடை அதிகம் உள்ளவர்கள் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.

*எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வாழ்வியல் முறைகளால் தீர்வு :

வாழ்க்கை முறையில் மாற்றம் என்பதே இந்த நோய்க்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் வெரி கோஸ் வெயின் புதிதாக உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலியைக் குறைக்க முடியும். அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறைகள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாக பயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றொரு இரத்த நாளத்தின் மூலமாக இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள் உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையான பஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை அளிக்கின்றன. நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தில் இந்த நரம்பு முடிச்சு நோயை குணப்படுத்த பல முறைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல அனுபவம் மிக்க சித்த மருத்துவரை அணுகி இந்த நோயை எளிதில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Uma

Recent Posts

வெங்காயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

தினசரி நாம் சமையலில் பயன்படுத்தும் வெங்காயம் சுவைக்கு மட்டும் அல்ல அதன் மருத்துவப்பலன்களால் தான் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். *…

14 mins ago

மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் பற்றி பார்ப்போம்!

*குடும்பத்தில் ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால்,உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது. *ஏற்கெனவே…

37 mins ago

தினமும் ஆறு சுவையும் உள்ள உணவை சாப்பிடுங்கள்!

அறுசுவைகள் நாம் உண்ணும் உணவு விருந்தாகவும் அதே சமயம் மருந்தாகவும் இருக்க வேண்டும். அறுசுவைகள் இனிப்பு - sweet புளிப்பு …

57 mins ago

கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கும் இன்சுலினுக்கும் தொடர்பு உண்டா?

கர்ப்பப்பையில் கட்டி என்பது சர்வசாதாரணமாக எல்லா பெண்களுக்கும் வரும் என்றாலும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை கர்ப்பப்பையில் நீர்க்கட்டி வருவதற்கு ஒரு காரணமாகிறது…

2 hours ago

Executive மற்றும் Sr . Executive பதவிக்கு வேலைவாய்ப்பு – 2021

Executive மற்றும் Sr.Executive பணிக்கு IRCTC எனப்படும் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் பணியாளர்களை நியமிக்க…

2 hours ago

SI மற்றும் Accounts officer பதவிக்கு வேலைவாய்ப்புகள் – 2021

Sub Inspector, Accountant மற்றும் Accounts Officer பணிகளுக்கு இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் பணியாளர்களை…

5 hours ago