கமகமக்கும் நெய் சோறு!

அடுத்த வீட்டில் பிரியாணி வாசம் வந்தாலே நம் நாவில் ஊறும். பெரும்பாலோனரின் விருப்பப்பட்ட உணவு பிரியாணி. ராஜ உபசாரத்தின் அடையாளம் தான் பிரியாணி.

How to prepare Ghee Rice

எல்லா நேரங்களிலும் பிரியாணி சமைப்பது என்பது எளிதன்று. பிரியாணிக்கான அத்தனை குணநலன்கள் கொண்ட ஒரு எளிய உணவு தான் நெய்ச்சோறு. பிரியாணிக்கு மாற்று நெய் சோறு அதே நேரத்தில் வயதானவர்களுக்கு கூட எளிதாக செரிக்கும் உணவு.

இன்றும் கிறிஸ்தவ, முஸ்லிம் வீடுகளில் விருந்து உபசரணைகளில் நெய் சோறு பிரதான உணவு.

நல்ல குளிர்வேளையில், முன்னிரவு மாலையில், நாசியைத்துளைக்கும் நெய் சோறு, தட்டில் சுடச்சுட….. அதற்கு தோதாக பொரித்த சிக்கன், தயிர் பச்சடி, பைனாப்பிள், மாங்காய் ஊறுகாய் இப்படி ஒரு விருந்தில் கலந்து கொள்ள விருப்பவரே ஆகச் சிறந்த அதிர்ஷ்டசாலி.

எவ்வளவு நேரம் தான் நெய் சோறு பெருமை பேச? எப்படி செய்வது என்று பார்ப்போம்!

Preparation time : 25 minutes
Cooking time : 25 minutes
Category : Variety rice / veg

தேவையான பொருட்கள் :
சீரக சம்பா – 1 டம்ளர்
நெய் – 1 கப்
நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்
கிஸ்மிஸ், முந்திரி தாளிக்க
பட்டை கிராம்பு, பிரிஞ்சி இலை ஏலக்காய்
உப்பு
விருப்பப்பட்டால் கொத்தமல்லி, புதினா தழை

செய்முறை :

Steps to prepare Nei soru

* வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும்.

* அதே வாணலியில் பெரிய வெங்காயத்தை பொரிக்கவும்.

* மீதமுள்ள நெய் பற்றாக்குறையெனில் மேற்கொண்டு சேர்த்து கொள்ளவும்.

* அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்து விடவும்.

* இதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் உடன் வெங்காயம் பச்சை மிளகாயைசேர்த்து வதக்கவும்.

* இதில் ஏற்கனவே பத்து நிமிடம் ஊறவைத்து கழுவிய சீரக சம்பா அரிசி போடவும்.

* உப்பு சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் என்ற அளவில் நீர் சேர்த்து வேகவிடவும்.

மென்தீயில் வேகவிடவும் கமகமக்கும் நெய் சோறு தயார்!


Ghee rice or Nei soru is an aromatic SouthIndian recipe, made using spices. It contains all behaviours of Biriyani. Even now, it gets a main role in the houses of Christians and Muslims. Any side dish such as Chicken fry, pineapple, mango pickle suits this spicy ghee rice. Dry fruits such as Cashews and kismis can be added to give extra flavour. With the key ingredients mentioned and by following the above steps, tasty ghee rice recipe can be prepared.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course