ஒவ்வொரு சர்க்கரை நோயாளியும் வீட்டிலே வெந்தயக்கீரை செடியை வளர்த்த வேண்டும்! ஏன் தெரியுமா?

* மலச்சிக்கல் , மூலம் போன்ற குடற்சார்ந்த கோளாறுகள் வெந்தயக்கீரை உண்பதால் நீங்கும்.
*வெந்தயக்கீரை உடல் சூட்டை தணிக்கும்.
*ஒரே இடத்தில் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் உண்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
*வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் , அல்சர் ஆகியவை  குணமாகும்.

*மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும்.
* வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது.
இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.
* வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப்  பலப்படுத்துகிறது.
வெந்தயக் கீரை வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
 

வீட்டில் வெந்தயக்கீரை வளர்த்த என்ன செய்ய வேண்டும்?

*முதலில் ஒரு கப் வெந்தயத்தை அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஊறிய வெந்தயத்தை நன்கு நீரில் வடித்து சுத்தமான காட்டன் துணியில் கட்டி வெயில் படாத இடத்தில் வைக்கவும்.
* அடுத்த எட்டு மணி நேரத்தில் முளைக்க ஆரம்பிக்கும்.
* ஒரு பூந்தொட்டி அல்லது பிளாஸ்டிக் டிரேயில் மண்போட்டு தயார் செய்யவும்.
* ஒரு பங்கு குப்பை மண் , ஒரு பங்கு செம்மண் அல்லது கரிசல் மண் இதனுடன் தென்னை நீர்க்கழிவு கூட  எடுத்துக் கொள்ளலாம்.இளகிய மண்ணாக இருத்தல் அவசியம்.
* முளைகட்டிய வெந்தயத்தை இதில் தூவி லேசாக மண் மூடி விடவும்.
* இரண்டு நாட்களில் அழகாக முளைக்க ஆரம்பித்து விடும்.
* முதல் பதினைந்து நாட்களில் பறித்து சமைத்தால் மைக்ரோ க்ரீன் .. இந்த நிலை வரை வளர்ந்த கீரை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இன்னும் சிறிது வளரவிட்டும் பறித்து கொள்ளலாம்.
* தண்ணீர் தெளித்து விட்டு தான் வளரவிடவேண்டும். தண்ணீர் அதிகமானால் அழுகி விடும்.
* வீட்டில் வளர்க்கும் கீரை எனும் போது சுகாதாரம் நிறைந்தது. பெரிதாக இடம் தேவையில்லை. தொட்டிகளில் வளர்த்தலாம். மேலும் அஞ்சறைப் பெட்டியில் உள்ள வெந்தயம் போதும். தனியாக விதை என்று வாங்க வேண்டாம்.
ஆர்வமும் ஈடுபாடும் அதேசமயம் நேரமும் ஒதுக்கினால் அருமையான சுவையான கீரைகளை சுவைக்கலாம்.
நீரிழிவு நோயின் அருமருந்து என்பதால் அனைவரும் முயற்சி செய்யவும். வருமுன்  காக்கும் பொருட்டு தினசரி உணவில் வெந்தயக் கீரையை சேர்த்து கொள்வது நல்லது.
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course