அன்றைய வாழ்க்கை முறை எளிமையும், எதிலும் ஒரு கட்டுப்பாடு என்றே இருந்தது. இன்று போல காலை எழுந்தவுடன் காபி டீ என்று உற்சாக பானங்கள் கிடையாது.
மண்டைகனக்கும் தலைவலி, சளித்தொல்லைக்கு கூட மாத்திரைகள் கிடையாது. உடனடி நிவாரணமாக சுக்கு காபியும், சுக்கு பத்தும் தான்.
சுக்குகாபி பல நோய்களுக்கு நல்லது. சுக்கு நீர், சுக்குக் காபி, சுக்கு மல்லி காபி என்று பல்வேறு விதமான பெயரில் அழைக்கப்பட்டது. டீ, காபி அருந்துவதால், நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது.
இன்ஸ்டன்ட் சுக்குமல்லி காபி
செரிமானக் குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி, தொண்டை கரகரப்புக்கு, வறட்டு இருமல் ஆஸ்துமா, வெள்ளைப் படுதல், சோம்பல் போன்றவற்றிற்கும் பலனளிக்கும்.
சுக்கு காபியில் பால் சேர்த்து அருந்தலாமா என நிறைய பேருக்கு சந்தேகம் உண்டு. பால் சேர்த்து அருந்துவது சரியான முறையல்ல.
சுக்கு காபி பொடி
தேவைப்படும்போது, தேவையான அளவு சுக்குப்பொடி எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, பனைவெல்லம் சேர்த்து வடிகட்டி அருந்தலாம். இதில் பால் சேர்க்கக்கூடாது. இதுதான் சுக்கு காபி.
‘சுக்கு வீட்டில் இருந்தால், சுகம் உடம்பில் இருக்கும்!’
Sukku Kappi (dry Ginger Coffee) is a south Indian spicy aromatic coffee. Dry ginger has powerful anti-inflammatory properties. During winter it will keep us warm throughout the day and prevent us from cold and flu. It relieves gastrointestinal distress., relieves throat disorders, cold, cough and fever. Coriander Lowers blood sugar, relieves urinary Tract Infections, decrease blood pressure, and supports healthy menstrual function. Follow the instructions to prepare sukku malli powder or instant sukku coffee.