இரத்த சோகையா இந்த ஜீஸைக் குடியுங்கள்!

இரத்த சோகையா என்பது பெரும் நோயல்ல, ஆனால் நோய்களுக்கு பச்சைக்கொடி காட்டி வரவேற்க்கும் . இரத்த சோகையா என்பது இந்தியா போன்ற நாடுகளில் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் சர்வசாதாரணமாக குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். உயர்தர உணவுகள் உண்பது மட்டும் தான் இரத்த சோகைக்கு தீர்வு என்பது தவறான கருத்து. எளிமையான உணவுகளான முருங்கை கீரை, பீட்ரூட் போன்ற எளிதில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு இரத்த சோகையில் இருந்து குணமாகலாம்.

இரத்த சோகைக்கு ஏற்ற உணவுகள் :

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த சிவப்பு அணுக்கள் உருவாக உதவுகிறது.

பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்பதுகூட நல்லது.

மேற்கண்ட உணவுகள் உண்பது மூலம் இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் ஏதேனும் வகையில் உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

பீட்ரூட் கீரை கிடைத்தால் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், தினசரி பீட்ரூட் ஜூஸ் ஒரு டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும்.

ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட்டை எப்படி எல்லாம் உணவில் சேர்த்துக் கொள்வது?

* பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

*பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

* தீயினால் சுட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

* பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

*பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

* புற்றுநோய் செல்கள்பரவுவதை தடுக்கும்.

பீட்ரூட் ஜீஸ் செய்முறை :

*புதிதான பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி அதனை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

* பீட்ரூட் வாசனை பிடிக்காதவர்கள் ஆப்பிள் , கேரட் மற்றும் பீட்ரூட் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும். இதனை வடிகட்டி இயற்கை இனிப்பூட்டிகளான தேன் , நாட்டு சர்க்கரை , பனங்கற்கண்டு சேர்த்து கலந்து பருகவும்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course