Categories: Health

முளை கட்டிய தானியங்கள் இவ்வளவு நன்மைகள் தருகிறதா?

முளை கட்டிய தானிய உணவானது நமக்கு புதிதன்று.இதன் நன்மைகளை உணர்த்துவது தான் கோவில் திருவிழா முளைப்பாரி சடங்குகள். முளைகட்டிய தானியங்கள் ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மேலும்  நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
இன்று இயற்கை உணவு உடலுக்கு நல்லது என்பது மக்களின் மனதில் பதிந்து விட்டதால் பச்சை காய்கறிகள் , பழங்கள் வரிசையில் முளைகட்டிய தானியங்களும் உள்ளது.  இயற்கை உணவில் முக்கியமான முளை கட்டிய தானியங்களைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

தானியங்கள் முளைக்கட்ட என்ன செய்ய வேண்டும்?

முளைகட்ட வேண்டிய தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வெளிச்சம் அதிகம் படாத இடத்தில் வைத்து விட்டால், தானியம் முளைவிட்டு இருக்கும்.

எந்த தானியங்கள் முளைக்கட்ட பயன்படுகிறது?

*பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு , கருப்பு உளுந்து,ராகி , கம்பு போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து உண்ணலாம்.
*மூன்று வேளையும் முளைகட்டிய தானியங்களை சாப்பிட முடியாவிட்டாலும், தினமும் ஒரு வேளையாவது இயற்கை உணவாக இதனை உட்கொண்டு வாருங்கள்.படிப்படியாக ஆரோக்கியம் மேம்படுவதை உணரலாம்.
*தானியங்கள் முளைக்கும் போது அதன் சத்துக்கள் இரட்டிப்பாகும். இதன் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை கூடுதலாக கிடைப்பதுடன் வைட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும்  கிடைக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதா?

முளைவிட்ட பச்சைப்பயிறு , வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் எடை கூடும். முளைவிட்ட கொண்டைக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் நிறைய சாப்பிடலாம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Uma

Recent Posts

மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் பற்றி பார்ப்போம்!

*குடும்பத்தில் ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால்,உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது. *ஏற்கெனவே…

1 min ago

தினமும் ஆறு சுவையும் உள்ள உணவை சாப்பிடுங்கள்!

அறுசுவைகள் நாம் உண்ணும் உணவு விருந்தாகவும் அதே சமயம் மருந்தாகவும் இருக்க வேண்டும். அறுசுவைகள் இனிப்பு - sweet புளிப்பு …

22 mins ago

கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கும் இன்சுலினுக்கும் தொடர்பு உண்டா?

கர்ப்பப்பையில் கட்டி என்பது சர்வசாதாரணமாக எல்லா பெண்களுக்கும் வரும் என்றாலும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை கர்ப்பப்பையில் நீர்க்கட்டி வருவதற்கு ஒரு காரணமாகிறது…

60 mins ago

Executive மற்றும் Sr . Executive பதவிக்கு வேலைவாய்ப்பு – 2021

Executive மற்றும் Sr.Executive பணிக்கு IRCTC எனப்படும் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் பணியாளர்களை நியமிக்க…

2 hours ago

SI மற்றும் Accounts officer பதவிக்கு வேலைவாய்ப்புகள் – 2021

Sub Inspector, Accountant மற்றும் Accounts Officer பணிகளுக்கு இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் பணியாளர்களை…

4 hours ago

Field Manager மற்றும் Coordinator பதவிக்கு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் – 2021

Field Manager,Coordinator மற்றும் Associate பதவிகளுக்கு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் பணியாளர்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். Central…

5 hours ago