இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுமா பாலில்லா காப்பி?

காப்பி பிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி ஆனால் இனிப்பு இல்லாத செய்தி. பால் , சர்க்கரை இல்லாத காப்பி என்பது காப்பியின் முழுபலன்களை உடல் கிரகித்துக் கொள்ள உதவும். ஆனால் நாம் வழக்கம் போல அருந்தும் பால் , சர்க்கரை சேர்த்து கள்ளிப்பால் சொட்டு போல பருகும் காப்பி  என்பது கலோரி மதிப்பு மிக்க ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது . பிறகு எப்படி பருக வேண்டும்? சர்க்கரை இல்லா கடுங்காப்பியில் சிறிது  தேங்காய் எண்ணெய் கலந்து குடிக்க வேண்டும் என்கிறார்கள் .
 

காப்பியில் தேங்காய் எண்ணெய் :

காப்பியில் உள்ள காஃபின் எனும் வேதிப்பொருள் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டுவதால் தான் காப்பி குடித்தவுடன் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறோம். மேலும் நாளடைவில் இதற்கு அடிமையாகி விடுகிறோம். இந்த கறுப்பு நிற காப்பியில் நிறமற்ற தேங்காய் எண்ணெய் என்னதான் செய்கிறது என்று பார்ப்போம். தேங்காய் எண்ணெய் என்பது தாவரக்கொழுப்பு , இதில் உள்ள கொழுப்பு என்பது உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு வகையைச் சேர்ந்தது. உலகெங்கும் தேங்காய் எண்ணெய் மீதான தவறான பிரச்சாரத்தால் இதனைப் பற்றிய தவறான கருத்து தான் மக்கள் மத்தியில் உள்ளது.

காப்பி -தேங்காய் எண்ணெய் பலன்கள்:

 இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் , உடல் எடையை குறைக்கிறது.மலச்சிக்கலை சீராக்குகிறது , உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. மெட்டபாலிசத்தை தூண்டுவதால் உணவு செரிமானம் சீராகிறது.
 

கீட்டோசிஸ்  என்றால் என்ன?

உணவில் கார்போஹைட்ரேட் உணவைக் குறைத்து கொள்ளும் போது , உடலுக்கு தேவையான ஆற்றலை ஏற்கெனவே சேர்த்து வைத்துள்ள கொழுப்பினை சிதைத்து கீட்டோன்களாக மாற்றுகிறது கல்லீரல். இந்த கீட்டோன்கள் ஒரு வித விதமான உடலுக்கு ஆற்றல் தரும் எரிபொருள் தான். இந்த செயலில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப் படுகிறது. தேங்காய் எண்ணெயை  கீட்டோஜெனிக் டயட்டில்  அதன் அதீத கொழுப்பு அது தரும் நன்மைக்காகவே சேர்த்துக் கொள்கிறார்கள். தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் கூட தேங்காய் எண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வருவது நல்லது என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.காப்பியும் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்தால் கீட்டோசிஸ் எனும் நிலையில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும். இதன் பலனாக உடல் எடை குறையும் மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். ஆகவேதான் கறுப்பு காப்பியில் தேங்காய் எண்ணெய் கலந்து குடிக்கிறார்கள். தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பானது medium-chain triglycerides (MCTs) வகையில் ஆனது. கீட்டோசிஸ் உண்டாவதை தூண்டுகிறது அதேசமயம் நீண்ட நேரம் இந்த நிலை நீடிக்கும் போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

காப்பி – தேங்காய் எண்ணெய் செய்முறை :

வழக்கம் போல காப்பி போடுவது போல தான். ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் டிகாஷன் தேவையான அளவு காப்பி தூளைச் சேர்த்து கொதி வந்ததும் அடுப்பை அணைத்து மூடி போட்டு இறக்கவும். இந்த காப்பியில் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து கலக்கவும். அப்படியே குடிக்க இயலும் என்றால் குடிக்கவும். குடிக்க இயலாதவர்கள் இந்த கலவையை மிக்ஸியில் அல்லது மிக்ஸரில் ஊற்றி நுரை வரும் வரை அடிக்கவும். நுரை ததும்பும் காபி உண்மையில் குடிக்க சுவையாக இருக்கும். லேசான தேங்காய் எண்ணெய் வாசனையில் வித்தியாசமான சுவையில் ருசிக்கலாம். முதல்முறை என்பதால் சிலருக்கு ரூசி பிடிக்காது. இனிப்பு தேவையெனில் இயற்கை சுவையூட்டியான ஸ்டீவியா சேர்த்து கொள்ளவும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் என்றால் நாட்டு சர்க்கரை , தேன் , கருப்பட்டி மற்றும் வெல்லம் ஏதாவது சேர்த்து கொள்ளவும். தேங்காய் எண்ணெய் மட்டும் இயன்றவரை செக்கில் ஆட்டிய எண்ணெயாக இருத்தல் நலம்.இந்த ரெசிபி யானது பேலியோ மற்றும் கீட்டோஜெனிக் டயட்டில் கடைப்பிடிக்க படுகிறது.
 

கவனிக்கபட வேண்டியவை :

சர்க்கரை இல்லாத கடுங்காப்பியில் தேங்காய் எண்ணெய் கலந்து அதனை மிக்ஸரில் அடித்து நுரை ததும்ப பருகலாம். இனிப்பு தேவையெனில் நாட்டு சர்க்கரை சிறிது சேர்த்து கொள்ளவும். ஆனால் ஒரு கப் காப்பிக் குடிக்க ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் போதுமானது ஏனெனில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயின் கலோரி மதிப்பு 124. ஒரு வேளை இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்தால் கிட்டத்தட்ட 248 அளவு கலோரிகளை எரிக்க  குறைந்த பட்சம் மூன்றரை மைல் நடக்க வேண்டும். இந்த காப்பியும் குடித்து வழக்கம் போல காலை உணவு உண்பது என்பது  எந்த பலனையும் தராது. பித்தப்பை மற்றும் கணையத்தில் கோளாறுகள் இருப்பின் காப்பியில் தேங்காய் எண்ணெய் கலந்து குடிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். தேங்காய் எண்ணெய் அளவு அதிகரித்தால் வாந்தி வரும் உணர்வு ஏற்படும். இதனை பருகிய பிறகும் பசி என்று உணர்ந்தால் கேரட் , வெள்ளரி என பச்சைக் காய்கறிகளை உண்ணலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க இதுவும் முறைகளில் ஒன்றாகும் ஆனால் இது மட்டுமே தீர்வு என்பதல்ல. ஒரு சுவை மாறுதலுக்கு இதனையும் முயற்சி செய்து பார்க்கலாம்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com