சுபவிழாக்களில் வெற்றிலையின் முக்கியத்துவம் ஏன்?

Betel Leaf with Betal Nut

இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து மங்கலகரமான காரியங்களிலும் அது குடும்ப விழாவாக இருந்தாலும், கோவில், சமூக விழா என்றாலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொருட்கள்தான் வெற்றிலை, பாக்கு ஆகும். வெத்திலை அல்ல வெற்றிலை என்பதை உணர்த்தவே வெற்றிலையை முன்னிலைப்படுத்தி இருப்பார்களோ?

வெற்றிலையின் ரகசியம்
வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளன என நம்புகின்றனர்.Leaves

வெற்றிலையின் நுனியில் மூதேவியும்,
வெற்றிலையின் காம்பில் மகாலட்சுமியும்,
வெற்றிலையின் நரம்பில் பிரம்மாவும்,
வெற்றிலையின் முன் பகுதியில் சிவனும்,
வெற்றிலையின் பின் பகுதியில் சக்தியும்,
என ஐம்பெரும் தெய்வங்கள் வெற்றிலையில் குடியிருப்பதாக இந்து மதத்தினரின் நம்பிக்கைகளில் ஒன்று.

எனவே தான் வெற்றிலை போடும்போது நுனியையும், காம்பையும், நரம்பையும் நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி போடுவர் பெரியவர்கள்.

வெற்றிலைக்கு “நாக இலை”, என்ற பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.

நாம் உண்ணும் உணவு முறையாக செரிக்கப் பட்டு சத்துக்கள் உடலில் முழுமையாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் நன்று.வெற்றிலை, பாக்கு, புகையிலை என்று அடிமையாவது தான் உடலுக்கு கெடுதல்.

நாப்பது வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை, பாக்கு சேர்தது உண்ணுதல் மிகவும் அவசியம். இந்த வயதிற்குப் பிறகு செரிமான சக்திகள் குறைய தொடங்கும். கர்ப்பிணி பெண்களைக் கூட வெற்றிலை பாக்கு போட சொல்வது கால்சியம் தேவைக்காக மட்டுமே.

வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலை போடும் முறை
வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது. இது குற்றமாகும். பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் மூச்சுக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும். மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது. அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும்.

Slaked Lime with Nut
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உண்ணும் போது முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை உமிழ்ந்துவிட வேண்டும். இரண்டாவது மெல்லும் போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும் உமிழ்ந்து விட வேண்டும். மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும். நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை விழுங்கலாம். இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது அதனால் மந்தம், பித்தம், பாண்டு போன்ற நோய் உண்டாகும்.

Betel leaf has numerous medicinal properties and it has high nutritional value. Its Indian tradition to offer two betel leaves along with betel nuts to the guests on every auspicious occasion. No Indian wedding is complete without betel leaf. Betel leaves contain many curative and healing health benefits as it is rich in vitamin c, calcium, thiamine and riboflavin. It increases appetite and helps to relieve from constipation. One of the most important pooja items in Hindu rituals is the betel leaf. It is consumed along with betel nut and slaked lime.


Leave a Reply

Your email address will not be published.

scroll to top

tamilbusinessideas.com