இஞ்சிப் பால் குடித்தால் வயிற்றில் என்ன நடக்கும்?

முறையான உணவுப்பழக்கம் இல்லாததால் செரிமானம் ஒழுங்காக நடக்காமல் மெட்டபாலிசம் மந்தமாகுகிறது விளைவு நோய்களுக்கு அடிப்படை காரணம் ஜீரணச்சக்தி குறைவது தான். இஞ்சிப் பால் வெறும் வயிற்றில் பருகும் போது செரிமானத்தை தூண்டுகிறது.
 

இஞ்சிப் பால் எப்படி செய்வது என்று பார்ப்போம்!

சதைப்பற்றான சிறிய துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கொள்ளவும். தோல் சீவிய இஞ்சித்துண்டை  ஒன்றிரண்டாக தட்டி, பிறகு முக்கால் கப் தண்ணீர் எடுத்து அதில் தட்டிய இஞ்சியை போட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி இஞ்சிச்சாறை எடுத்துக் கொள்ளவேண்டும்.
 அரைக்கப் காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய இஞ்சிச்சாறு கலந்து கொள்ளவும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கொள்ளவும். காரசாரமான இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கவும்.
 

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

1. நுரையீரலில் உள்ள கழிவுகள் வெளியேறி சுத்தமாகும்.
2. நெஞ்சு சளியைக் கரைத்து வெளியேற்றும்
3. செரிமானம் சீராகும் போது வாயுத் தொல்லை என்பதே வராது.
4. உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து விடும்.
5. வாயுவை வெளியேற்றும் என்பதாலும் , தேவையற்ற கொழுப்புகளை கரைத்து விடும் என்பதால் தொப்பையின் அளவைக் குறைக்கும்.
6. அதிகமான எடை நாளடைவில் படிப்படியாக குறைந்து விடும்.
7. உடல் எடை குறைக்க இதுவும் ஒரு சிறந்த வழி.
8. இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி விடும். எனவே மாரடைப்பு  வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
9. பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு  நாள் முழுவதும் சுறுசுறுப்பாகிறது.
 

இஞ்சிப் பால் யாரெல்லாம் குடிக்கக் கூடாது?

இஞ்சிப் பால் குடிக்க வயதுவரம்பில்லை ஆனால் மூன்று வயதுக்கு மேற்பட்ட எவரும் குடிக்கலாம். ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கவும்.
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course