Categories: Health

உடலில் உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்றும் ஆசனம்..

உடலில் உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற  உதவும் ஆசனம் இது. மேலும் இந்த ஆசனம் அடிவயிறு, தொடைகள், இடுப்பு, பின்பகுதி ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும்.

பவனமுக்தாசனம்

மல்லாந்து படுத்துக் கைகளை உடலோடு சேர்த்தி வைக்கவும். உடல் ஆசுவாசமாக இருக்க வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்து விடலாம். 90 டிகிரி மேலே கால்களை தூக்குங்கள். இதைச் செய்ய முடியாதவர்கள் சற்றே மடித்த நிலையிலும் தூக்கலாம்.

காலை தூக்கியவாறு மடித்து அடிவயிறு, மேல் வயிறு ஆகியவற்றில் 

படியும்படி வையுங்கள். மடித்த கால்களைக் கட்டிக்கொண்டபடி தொடைகள் இரண்டும் வயிற்றுப் பகுதியை நன்கு அழுத்தியிருக்க வேண்டும். முழங்காலில் தாடை படும்படி தலையைத் தூக்கி வைக்க வேண்டும். மூச்சு சீராக இருந்தால் நலம். மூச்சைப் பிடித்துக்கொண்டிருப்பதைத் தவிருங்கள்.

கழுத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல். இடுப்பு அல்லது முழங்கால் வலிக்கும் அளவுக்கு அழுத்துவதைத் தவிருங்கள். தொடைகளை வயிற்றோடு சேர்த்து வைக்க முடியாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து பாருங்கள். ஒரு சில நாள்களில் வசப்படும். இல்ல்லையென்றால் முடிந்தவரை அழுத்தினால் போதும்.

பலன்கள்

அடிவயிறு, தொடைகள், இடுப்பு, பின்புறப்பகுதி போன்ற எல்லாவற்றிற்கும்  வலு சேர்க்கும். கழுத்துக்குப் பயிற்சி கிடைக்கும்.ரத்த ஓட்டம் அடிவயிறு அழுத்தப்படுவதால் அதிகரிக்கச்செய்யும். இது உள் பாகங்களுக்கு நல்லது.

தேங்கியிருக்கும் பெருங்குடல் வாயுவை வெளியேற்றும். ஜீரண பாகங்கள் நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் குறையும் / நீங்கும். முதுகின் அடிப்புறத் தசைகளுக்கு பலம் சேர்க்கும். 

ஆசுவாசம் தண்டுவடத்துக்கும் முதுகெலும்புக்கும் கிடைக்கப்பெரும்  பிள்ளைப்பேறுக்கான வாய்ப்பு, செயல் திறன் கூடும்.  

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

prem

Recent Posts

வெங்காயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

தினசரி நாம் சமையலில் பயன்படுத்தும் வெங்காயம் சுவைக்கு மட்டும் அல்ல அதன் மருத்துவப்பலன்களால் தான் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். *…

34 mins ago

மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் பற்றி பார்ப்போம்!

*குடும்பத்தில் ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால்,உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது. *ஏற்கெனவே…

56 mins ago

தினமும் ஆறு சுவையும் உள்ள உணவை சாப்பிடுங்கள்!

அறுசுவைகள் நாம் உண்ணும் உணவு விருந்தாகவும் அதே சமயம் மருந்தாகவும் இருக்க வேண்டும். அறுசுவைகள் இனிப்பு - sweet புளிப்பு …

1 hour ago

கர்ப்பப்பை நீர்க்கட்டிக்கும் இன்சுலினுக்கும் தொடர்பு உண்டா?

கர்ப்பப்பையில் கட்டி என்பது சர்வசாதாரணமாக எல்லா பெண்களுக்கும் வரும் என்றாலும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை கர்ப்பப்பையில் நீர்க்கட்டி வருவதற்கு ஒரு காரணமாகிறது…

2 hours ago

Executive மற்றும் Sr . Executive பதவிக்கு வேலைவாய்ப்பு – 2021

Executive மற்றும் Sr.Executive பணிக்கு IRCTC எனப்படும் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் பணியாளர்களை நியமிக்க…

3 hours ago

SI மற்றும் Accounts officer பதவிக்கு வேலைவாய்ப்புகள் – 2021

Sub Inspector, Accountant மற்றும் Accounts Officer பணிகளுக்கு இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் பணியாளர்களை…

5 hours ago