பேரீச்சம்பழத்தில் இத்தனை மருத்துவ குணங்களா ?

பாலைவனப் பகுதிகளில் விளையும்  பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணத் தகுந்த பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் இரண்டு வகைகள் தான் நமக்கு தாராளமாக கிடைக்கிறது. பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கியத்துவம் தரப்படுகிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

*கர்ப்பிணிகளுக்கு ஏன் பேரிச்சம் பழம் நல்லது?

கருவுற்ற பெண்ணுக்கு பேரீச்சம் பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த இதனை கர்ப்பக்காலத்திலும் , பிரசவக் காலத்திலும் அவசியம் இளம் தாய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் பிரசவச்சிக்கல்கள் குறைந்து
 சுகப்பிரசவம் ஆகும். பதிமூன்று வயதில் இருந்து மெனோபாஸ் காலத்திற்கு பிறகும் கூட பெண்கள் அவசியம் பேரிச்சம் பழம் உண்ணவேண்டும்.
 

* பார்வைத்திறன் மேம்படும்:

கண்பார்வை குறைபாட்டை குணப்படுத்த சிறந்த மருந்து பேரீச்சம் பழமே, இதில் விட்டமின் ‘ஏ’ அதிகமாக உள்ளது , மாலைக்கண் நோயால் பாதிக்க பட்டவர்கள், தேனுடன் பேரீச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் குறிப்பாக விட்டமின் ஏ கிடைக்கும். எனவே கண் பார்வைகோளாறுகள் நீங்கும்.

இளைத்தவர்களுக்கு பேரிச்சம் பழம்:

எந்த காரணமும் இன்றி உடல் இளைத்திருந்தாலும், அவர்கள் பேரீச்சம்பழத்தைத் தாராளமாக நிறைய சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால், மெலிந்த உடல் தேறும்.தம்பதியர்களுக்கு போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.

பேரிச்சம் பழப் பானம்:

பேரீச்சம் பழத்தை கொட்டைநீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பசும்பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து
ஏலக்காய்-3, குங்குமப்பூ-5 இதழ் கூடடிக் கலந்து பருகலாம்.குழந்தைகள் மட்டும் அல்லாமல் அனைவருக்கும் ஏற்ற சத்துள்ள நல்ல டானிக்.
தினமும் இரவில் படுக்கசெல்லும் முன்னர் ஒருடம்ளர் காய்ச்சிய பசும் பால் மற்றும் இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டுவந்தால் உடல் நல்ல பலம் பெறும். புதிய ரத்தம் உண்டாகும்.

பேரிச்சம் பழக்கொட்டை டீ:

பேரிச்சம் பழத்தின் கொட்டைகளை வீணாக்காமல் லேசாக வாணலியில் வறுத்து பொடி செய்து அதனை டீப்போல பருகலாம்.
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course