வாந்தி வருவதற்கான காரணங்கள்

வாந்தி என்பது நோயல்ல. நோய் வருவதற்கான எச்சரிக்கை, உடலுக்கு ஒவ்வாமை என்பதை புரியவைக்கும் அறிகுறி. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

வாந்தி ஏன் வருகிறது?

உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள முகுளத்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது, வயிற்றில் இருந்து உணவு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதால் வாந்தி வருகிறது.

வாந்தியால் உடலுக்கு நல்லதா, கெட்டதா?

வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவகளையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான். இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும்.

தொடர்ந்து வாந்தி எடுக்கும் போது நீர்ச்சத்து குறைந்து உடல் சோர்வுடன் உடல் சோர்வுடன் பலவீனமாகி விடும்.

உணவு ஒவ்வாமை

* கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது

* ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது

* அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது

* விர்டிகோ போன்ற கழுத்து வலி

* இரைப்பைப் புண், இரைப்பையில் துளை பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், மஞ்சள் காமாலையால் கூட வாந்தி ஏற்படும்.

* புற்றுநோய் மருந்துகள் வாந்தியை ஏற்படுத்தும்.

* காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினைகளாலும் வாந்தி வரும். நமது உடலின் சமநிலையை காதுகள் தான் ஒழுங்குப்படுத்துகிறது.

கர்ப்பகால வாந்தி!

Pregnant Women

கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் சில ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படுவதால்
மசக்கை வாந்தி வருகிறது.

* முதல் நாள் இரவில் நிறைய மது குடித்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு.

* சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது.

உளவியல் காரணங்கள்

சிலருக்குக் கவலை, கலக்கம், பயம், பதற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வாந்தி உண்டாவது வழக்கம். இந்த வாந்தி பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும். பகல் நேரப் பணிகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயப்படுபவர்களுக்கு, உளவியல் ரீதியாக உடல் பதட்டமடையும் போது வாந்தி வரும்.

வாந்திக்கான சிகிச்சை

வாந்தியை நிறுத்துவதற்குப் பல மருந்துகள் உள்ளன இருந்தாலும் வாந்திக்கு என்ன காரணம் என்று தெரிந்து, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றால்தான் வாந்தி குணமாகும்.

வாந்தி எடுத்து உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓ.ஆர்.எஸ்’ (oral rehydration solution) எனப்படும்
ஒரு பங்கு உப்புடன் மூன்று பங்கு சர்க்கரையை தண்ணீரில் கலந்து கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்.

பயண வாந்திக் கோளாறு உள்ளவர்கள் பேருந்துப் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.


The timing of the nausea or vomiting may indicate the cause. Vomiting shortly after a meal may be caused by food poisoning, gastritis (inflammation of the stomach lining), ulcer, or bulimia. Nausea or vomiting one to eight hours after a meal may also indicate food poisoning. Psychological factors such as anxiety, stress, excitement can also cause nausea and vomiting. Most of the women experience vomiting and nausea(called morning sickness) during pregnancy.


scroll to top