நினைவு ஆற்றலைப் பெருக்கும் வல்லாரை

நினைவு ஆற்றலுடன் மூளை தொடர்புடையது என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். வல்லாரையைப் பற்றி ஆயுர்வேதத்தில் சுஸ்ருதர், சரகர் காலத்திலே குறிப்புகள் உள்ளது என்கிறார்கள். மூளையையின் ஆற்றலை புதுப்பித்து நரம்புகளைத் தூண்டும் வல்லாரை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரமான பகுதிகளான ஆற்றங்கரைகள், ஓடைகள், ஏரி, குளக்கரைகள், வயல் வரப்புகள் மற்றும் களிமண் பாங்கான நிலங்களில் வல்லாரை பசுமையாக அடர்ந்து வளர்ந்திருக்கும். வல்லாரை வேர்த் தண்டுகள் கிளைத்து ஓடும் படர் தாவரம். பல்லாண்டுகள் வரை உயிர்வாழ்பவை.

வல்லாரையின் வேறு பெயர்கள்

வல்லாரை தாவரத்தின் சமஸ்கிருதப் பெயரான மண்டூகபரணி மற்றும் சரஸ்வதி கீரை, பிரம்மி, யோசனை வல்லி, வல்லமைக்கீரை என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது.

வீட்டு தோட்டத்தில் வல்லாரை

Vallarai

வல்லாரை வளர்ப்பது மிகவும் எளிதானது. வேருடன் உள்ள ஒரு வல்லாரைத்தண்டை நம் வீட்டுத் தோட்டத்தில் அல்லது தொட்டியில் நட்டால் சில தினங்களில் படர்ந்து வளரத் தொடங்கும். வாரம் ஒரு கைப்பிடி அளவு இலைகள் கிடைத்தால் போதும். இன்றைய காலகட்டத்தில் சர்வசாதாரணமாக வல்லாரை கிடைக்கிறது. வல்லாரைக் கீரை நாம் அனைவரும் நன்கு அறிந்து உபயோகிப்படுத்த வேண்டிய மூலிகையாகும்.

வல்லாரை ரெசிபிகள்

Vallarai Keerai Thuvayal

வல்லாரை துவையல், வல்லாரை கீரைக்கூட்டு, வல்லாரை சம்பல், வல்லாரை கீரை சாம்பார், வல்லாரை தொக்கு, வல்லாரை தோசை என பலவிதமான ரெசிபிகள் உள்ளது.

மூளைக்கு வல்லாரை

வல்லாரையில் உள்ள பாகோசைட்ஸ் (bacosides A & B) மூளையின்ஆற்றலை பெருக்குகிறது அதாவது உடலின் கழிவுகள் மூலம் உற்பத்தி ஆன ஃப்ரீ ரேடிகல்ஸ்கள் (free radicals) மூளை திசுக்களை சேதப்படுத்துவதை தடுக்கிறது. மூளைச்செல்களை புதுப்பிக்கிறது.

வல்லாரையானது மூளையில் அசிட்டைல் கோலைன் எனும் (acetyl cholin neurotransmitter) நரம்பு கடத்தியின் உற்பத்தியைத் தூண்டுகிறது. புரிதல், உணர்தல், நினைவு ஆற்றல் என மூளையின் செயல்பாட்டை அசிட்டைல் கோலைன் நிர்ணயிக்கிறது. வயிற்று போக்கு, ஆஸ்துமா என சில வியாதிகளுக்கு எடுக்கும் மருந்துகள் அசிட்டைல் கோலைனை அழிக்கிறது இதனைத்தடுக்க உணவில் அடிக்கடி வல்லாரை சேர்த்து கொள்ளவும்.

குறிப்பு

வலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்கு வல்லாரையை மாத்திரைகள், டானிக் என உட்கொள்ளும் மருந்தாகக் கொடுக்கக் கூடாது. மேலும், இதை தொடர்ந்து சாப்பிட்டால் பக்கவிளைவாக தலைச்சுற்றல், தலைவலி ஆகிய உபாதைகளைத் தோற்றுவிக்கும். மருத்துவ ஆலோசனையின் பேரில் தான் வல்லாரை மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.


Vallarai is found mostly in waste lands. It is good to improve cognitive skills. Presence of Bacosides A and B in vallarai help to enhance memory. It stimulates Acetylcholine, a neurotransmitter used at the neuromuscular junction. Variety of recipes can be prepared with vallarai – vallarai keerai poriyal, keerai kuzhambu, vallarai keerai dosai, vallarai keerai thokku, thuvayal, sambar, kadaiyal, etc.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com