கர்ப்பக் காலத்தில் ஏற்படும் மனத்தடுமாற்றங்கள் (mood swings)

கர்ப்பம் என்பது பெருமகிழ்ச்சி தரும் விஷயம் தான் ஒவ்வொரு பெண்ணுக்கும், தன் குழந்தையின் அழகு, நிறம், முடி, குரல் பற்றிய நிறைய கற்பனைகள், அந்த கற்பனைகள் தரும் சந்தோஷம் இது ஒரு வித அனுபவம் என்றால், தனக்கு தெரிந்த பெண்களின் கர்ப்பகால கதைகளைக் கேட்டு பயப்படுவது, பொருளாதார சிக்கல்கள், உறவும் சிக்கல்கள் என்று பிரசவித்த பின்னர் வரும் பிரச்சினைகளை எண்ணி மனம் குழம்புவது, இந்த வகை மன அழுத்தங்களே கர்ப்பிணியின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம்.

புது வாழ்வு

Pregnancy

கர்ப்ப காலம் என்பது நம் வாழ்க்கையையும், வாழ்வியல் முறைகளையும் மாற்றி அமைக்கும் நிகழ்வு. இந்த புது உறவிற்க்காக காத்திருக்கும் காலத்தில் உடலிலும் மனதிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. உடலின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வது போல மனதிலும் ஏற்படும் மாற்றங்களை புரிந்து அதனை எதிர்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் அம்மா, பாட்டி, சித்தி என இவர்களது ஆலோசனைகள் சந்தேகங்களை தீர்த்து நம்பிக்கையுடன் பிரசவத்தை எதிர் நோக்க செய்யும்.

தாயின் உடல்நலம் பாதிக்கும் மனநிலை மாற்றங்கள் (mood swings)
* மனநிலை மாற்றங்கள் தாயின் உடல் நிலையைப் பாதிக்கும் போது, அளவுக்கு அதிகமான உடற்சோர்வினால் கர்ப்பிணி பெண் அவதிப்படுவார்.

* உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்படும் போது, மூளையில் உள்ள சில வேதிப்பொருட்களின் தூண்டுதலால் மனமாற்றம் ஏற்படுகிறது.

* கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில் (first trimester) மற்றும் இறுதி மூன்று மாதங்களில் (last trimester) தான் மனநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது.

மனமாற்றத்தை (mood swings) எப்படி சமாளிப்பது?
* போதுமான உறக்கம் மிகவும் அவசியம்

* இயன்ற வீட்டு வேலைகளை செய்து சுறுசுறுப்பாக இருக்கவும்.

* சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* கணவருடன் அதிக நேரம் செலவழியுங்கள்.

* தினசரி நடைப்பயிற்சி நன்று

* நட்புகளுடன் நேரத்தை செலவழியுங்கள்.

* கர்ப்ப கால யோகா அல்லது மிதமான மசாஜ் எடுத்து புத்துணர்வு பெறலாம்.

மனமாற்றத்தின் தீவிர விளைவுகள்
மனமாற்றம் எப்போது தீவிரமாகி மன அழுத்தத்தை உண்டாக்குகிறதோ அப்போது கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை தேவைப்படும்.

Pregnancy Mood Swing

* தூக்கம் வராமல் தவிர்த்தல்.

* எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்த இயலாத நிலை.

* உணவுப் பழக்கத்தில் வேறுபாடு.

* நினைவு ஆற்றல் குறைதல் – short term memory loss

மேற்கண்ட காரணங்களால் அவதிப்பட்டால் மருத்துவ ஆலோசனை தேவை.

Bangle ceremony

இந்த மனநிலை மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வால் தான் நம் முன்னோர்கள் “வளைகாப்பு”, எனும் சடங்கை ஏற்படுத்தி உள்ளார்கள் போல. நாங்கள் அனைவரும் பெத்து பிழைத்து நல்லபடியாக இருக்கிறோம் என்று தைரியம் சொல்வது போல் வயதில் மூத்த பெண்கள் கொண்டு நடத்தும் சடங்கு தானே? வளைகாப்பு.


During pregnancy, fluctuating hormone levels can affect brain chemicals which can have a major impact on the mood of the mother. It can change from joy to anxiety to depression. Sometimes, pregnant women don’t realize they are depressed. Mood changes can be caused by physical stresses, fatigue, changes in your metabolism, or by the hormones estrogen and progesterone. Valaikappu/bangle ceremony is celebrated in the 7 month of pregnancy. It is also called as seemandham. It is the function organized by the elders of the home for the welfare of an expectant during her pregnancy period. The equivalent in Western culture would be baby shower.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course