மலர்களின் மருத்துவப் பயன்கள்

மலர்கள் அந்த செடியின் முகவரிகள். மலரின் நிறமும் மணமும் காணும் போது தான் தோன்றும் இறைவன் என்னவொரு ரசனைக்காரன் என்று.எத்தன்னை கோடி மலர்களை படைத்துள்ளான். ஒவ்வொரு மலரும் தனக்கென தனி நிறம், அழகு, பயன்கள் கொண்டுள்ளது. அழகுக்காக, மருந்தாக, மணத்திற்கு, உணவாக என மலர்களின் பயன்களும் அதன் வகைகள் போன்று எண்ணிக்கையில் அடங்காதது.

மலர்மருத்துவம், மூலிகை மருத்துவம், உணவே மருந்து என மலர்களின் மருத்துவப் பயன்களால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.

மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்ததோடு மட்டும் அல்லாமல் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சில முக்கியமான மலர்களின் மருத்துவப் பயன்கள் பற்றி பார்ப்போம்.

ஆவாரம் பூ

Avarampoo benefits

மஞ்சள் நிறத்தில் கேட்பாரின்றி பூத்துக்குலுங்கும் கொத்து மலர்கள். மேனியின் நிறம் கூட்டும் மலர் இது. ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி 1 ஸ்பூன் உலர்ந்த ஆவாரம்பூ வை நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

செம்பருத்திப்பூ
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி நெஞ்சு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும். கூந்தல் வளர்ச்சி தைலங்களில் செம்பருத்தி பூவும் உண்டு‌. செம்பருத்தி டீ, செம்பருத்தி பூ மணப்பாகு என குடிப்பதற்கு பானங்கள் தயார் செய்கிறார்கள்.

ரோஜாப்பூ
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் நல்லது. ரோஜா குல்கந்து, ரோஸ் வாட்டர், அத்தர் என இதன் பயன்பாடு அதிகம்.

வேப்பம்பூ

Neem Flower

சிறந்த கிருமி நாசினி இது. இதன் நறுமணம் தனி. தேனீக்கள் மொய்க்கும் வேப்பம்பூ. வேப்பம்பூ சீசனில் கிடைக்கும் தேன் கூட இலேசான கசப்பு டன் காணப்படும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது. வேப்பம்பூ தொக்கு, ரசம் என்று அதன் மருத்துவப் பயன்களால் கோடைக்காலங்களில் சேமிக்க படுகிறது.

முருங்கைப்பூ
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.கர்ப்பிணிப் பெண்களுக்கு முருங்கை பூ, பாசிப்பருப்பு சேர்த்து கஞ்சி செய்து கொடுப்பார்கள். கர்ப்பிணிக்கு தேவையான இரும்புச் சத்து இதன் மூலம் நிவர்த்தியாகிறது.

மல்லிகைப்பூ
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் கட்டும் போது மார்பில் மல்லிகையை வைத்தால் வலியும், காய்ச்சலும் குணமாகிறது.

குங்குமப்பூ

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 4 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவரலாம் பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது. இதன் நிறத்திற்க்காகவே உணவில் சேர்த்துக் கொள்வது உண்டு.


Each flower has its own medicinal benefits. Avarampoo blooms in the month of November, December and January. It is used to treat uneven skin, prevent black spots and keep the skin free of blemishes. Powdered avarampoo helps to treat diabetes. Rose, a good fragrant flower that is high in Vitamin C, anti-inflammatory properties, treats cough and cold. Rose water is used in beauty care. Hibiscus flower is used to cure heart disorders and used in hair care. The deep orange aromatic pungent dried stigmas of a purple-flowered Saffron is used to color and flavor foods and formerly as a dyestuff and in medicine. The tiny, white neem flower have some amazing medicinal benefits. It cures digestive disorders, improves eye sight, treats skin problems.


scroll to top