இடது பக்க அடிவயிற்றில் வலியா? கவனம் தேவை!

வலி என்பது  சோர்வு, இயலாமை, போதாமை யின் போது நாம் புலம்புவது போலத்தான் நம் உள்ளுறுப்புகள் வெளிப்படுத்தும் அறிகுறி தான்.

வலியின் அளவு ஒவ்வொரு தனிமனிதனின் மனவலிமையை சார்ந்தது. ஊசிக்குத்துலதற்க்கு ஊரையே இரண்டாக்கும் நபர்களையும் பார்த்திருப்போம். வரிசையாக நாலைந்து அறுவை சிகிச்சை செய்தவர்கள் கூட சிரித்து கொண்டே வலிகளை கடந்து விடுவார்கள்.

பெண்கள் வலி என்று வாய் விட்டு வெளியே சொல்கிறார்கள் என்றால் தாங்க முடியாத வலியைத்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று தாமதிக்காமல் அவர்களின் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் குடும்பம் என்றும் ஒளியில் திகழ, தன்னையே உருக்கிக்கொள்ளும் மெழுகுவர்த்தி தான் ஒவ்வொரு பெண்ணும்.

மருத்துவர்கள் மனிதனின் வயிறை நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார்கள்.

Stomach

1 .வலது மேல் வயிறு
2. இடது மேல் வயிறு
3. வலது கீழ் வயிறு
4. இடது கீழ் வயிறு

ஒவ்வொரு மனிதனும் அவனது வாழ்நாளில் ஒரு முறையாவது வயிறு வலி என்பதை உணர்ந்து இருப்பான்.

இடது பக்க வயிற்றில் வலி என்பது அவசியம் கவனம் செலுத்த வேண்டிய விஷயம். முக்கிய உறுப்புகள் அனைத்தும் வயிற்றில் அதுவும் இடது பக்கம் எனும் போது அதீத கவனம் செலுத்த வேண்டும்.

Left Lower Abdomen

அடிவயிற்றின் இடது பக்கத்தில் கடுமையான வலி ஏற்படுகிறதா? ஆம் என்றால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே அதற்கான காரணத்தை மருத்துவரிடம் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனெனில் ஏதோவொரு நோய்கான அறிகுறியாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே அதைக் கவனித்து, சிகிச்சைப் பெற்று வந்தால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம்.

அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி வருவதற்கான காரணங்கள்
* சிறுநீர் பாதையில் தொற்றுகள் இருந்தால், அடிவயிற்றின் இடது பக்கமாக வலி ஏற்படும்.

* அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் சிறுநீர்ப்பை அழற்சி ஆகும். இந்த நிலை ஒருவருக்கு இருந்தால், அடிவயிற்று வலியுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் நேரிடும்.

* சிறுநீர்ப்பையில் கற்கள் தோன்றினாலும் அடிவயிறு வலிக்கும்.

* மலச்சிக்கலுடன் வயிற்றில் வாய்வு அதிகமாக தேங்கி அசௌகரியத்தை உணர்ந்தால், அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்படும்.

* குடலில் அழற்சி இருந்து, அசாதாரண இடைவெளியில் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டால்,  அப்பென்டிசைடிஸ் நோய் உள்ளது என்று அர்த்தம். இந்நோய் இருந்தால், அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலிக்கும்.

* கிரோன் நோயின் முக்கிய அறிகுறியே அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலிப்பது தான். இது செரிமான பாதைகளில் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகும்.

* எக்டோபிக்/இடம் மாறிய கர்ப்பம்திருமணமாகி கருத்தரித்த பெண்களுக்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்பட்டால், சிசு கருப்பையினுள் வளராமல், இடது பாலோப்பியன் குழாயினுள் வளர்கிறது என்று அர்த்தம்.

பயமுறுத்தும் அறிகுறிகள் அல்ல அதேசமயம் அலட்சியப்படுத்தக்கூடாத அறிகுறிகள்.


Pain in the left lower side of the abdomen is referred to as left lower quadrant pain. This lower left abdominal pain occurs in both male and female. Crohn’s disease is most common in the small intestine that gives the pain. Diverticulitis is also a common cause of this pain. A bladder infection, also known as cystitis, can cause pain in the lower left side of the abdomen. Ectopic pregnancy can also be a reason for the pain.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top