பாதாம் பால் குடிப்பது நல்லதா?

பாதாம் பால் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம். சுக்குப்பால், தேங்காய் பால், பருத்திப் பால், நிலக்கடலை பால் என நம்ம ஊரு பல்வேறு ருசியான பால்கள் வரிசையில் இது ஒரு வெளிநாட்டு இறக்குமதி பானம்.

பாதாம் பால் ஏன் நல்லது?

Milk

பால் புரதம், சோயா புரதம் செரிமானத்தில் கோளாறு உள்ளவர்களுக்கு பாதாம் பால் குடிப்பதால் பாலின் மூலம் கிடைக்கும் தேவையான சத்துக்கள் கிடைத்து விடுகிறது. வேகன் டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு தாவரத்தில் அதாவது பாதாம் பருப்பில் இருந்து கிடைக்கும் பால். பசும்பாலை விட ஐம்பது சதவீதம் கலோரி அளவு குறைவு.

ஊட்டச்சத்துக்கள்
வழக்கமான மாட்டு பாலை விட இதில் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது.அதே சமயம் பாதாம் பாலில் 49% விட்டமின் டி உள்ளது. கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியது.

இதயத்திற்கு வலுவூட்டும் பாதாம்
பாதாமில் உள்ள விட்டமின் ஈ மற்றும் ஒலியிக் அமிலம் போன்ற நல்ல கொழுப்புகள் இதயத்திற்கு நல்லது. LDL – Low density cholesterol அளவுகளை குறைத்து HDL – High density cholesterol அளவுகளை அதிகரிக்கிறது. இதனால் இரத்த குழாயில் கொழுப்பு படிதல் தடுக்கப்படுகிறது.

விட்டமின் டி பற்றாக்குறைக்கு தீர்வு
வெயிலில் நடமாடுவது மற்றும் பால் பொருட்கள் உட்கொள்வதில் குறைவதால், விட்டமின் டி பற்றாக்குறை பரவலாக காணப்படுகிறது. விட்டமின் டி குறைப்பாட்டால் எலும்புகள் வலுவிழந்து எளிதாக உடைவதும், தசைகள் வலுவிழந்தும் காணப் படுகிறது. இதற்கு ஒரே தீர்வு பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது தான். பசும்பாலை தவிர்ப்பார்கள் பாதாம் பாலை எடுத்து கொள்ளலாம்.

பாதாம் பால் செய்முறை
* 8 விருந்து 12 மணி நேரம் வரை பாதாம் விதைகளை ஊறவைக்கவும்.

Almond

* ஊறிய பாதாமில் தோலை உரித்து எடுப்பது எளிதாக இருக்கும் என்பதால் தோலை நீக்கவும்.

* ஒரு தம்ளர் தண்ணீருக்கு பதினைந்து பாதாம் பருப்புகள் கொண்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

நுரை ததும்பும் பாதாம் பால் தயார். அப்படியே குடிக்கலாம் அல்லது பாலினை பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் பாதாம் பாலை பயன்படுத்தலாம்.

பாதாம் பாலை எப்படி பயன்படுத்துவது?
* ஓட்ஸ் கஞ்சி, செரியல்களில் மாட்டு பாலுக்கு பதிலாக பாதாம் பாலை பயன்படுத்தலாம்.

* காபி, டீ யில் பாதாம் பாலை சேர்த்து பருகலாம்.

* ஐஸ்கிரீம், புட்டிங்களில் பாதாம் பால் சேர்த்து செய்யலாம்.

* பால் சேர்த்து செய்யும் பேக்கிங் உணவுகள் அனைத்திற்கும் பாதாம் பாலை பயன்படுத்தலாம்.

* ஸ்மூத்தி, சாலட், சாலட்டிற்க்கு டிரெஸ்ஸிங் ஆகப்பயன்படுத்தலாம்.

எச்சரிக்கை
பச்சிளம் குழந்தைகள், tree nut allergies – விதைகள் செரிமானம் குறைபாடு அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.


Badam milk or Almond milk is nutritious, low in calories, high in Vitamin D, strengthen bones. It is a good source for people who avoid diary milk as it contains enough nutrients to the body. It is good for heart since it reduces LDL and increases the level of HDL. Badam powder is made by crushing the seeds after removing the skin by soaking in water. Store-bought badam milk powder contains very less number of almonds. So prepare almond powder at home easily as per the procedure.


scroll to top