சளியை விரட்டும் இஞ்சிப் பால்!

Ginger Milk for Cold

மழைக்காலம் வந்தாலே சளித்தொல்லை, இருமல், ஆஸ்துமா என்று சுவாசக் கோளாறுகள் படையெடுக்கும். பாட்டி வைத்தியம் முதல் நவீன சமையல் வரை இஞ்சியின் உபயோகம் இல்லாமல் இல்லை. மருத்துவ குணம் நிறைந்த இஞ்சியை கொண்டு ஒரு எளிய பானம் தான் இஞ்சிப் பால்

Preparation Time: 5 mins
Cooking Time: 5 mins
Total Time: 10 mins

தேவையான பொருட்கள் :

இஞ்சி – சிறிய துண்டு
தண்ணீர் – 2 கப்
காய்ச்சிய பால் – 1 கப்
சர்க்கரை – தேவையானவை

செய்முறை :

Ginger

* சிறிதளவு இஞ்சி துண்டினை எடுத்துக் கொண்டு அதனுடைய தோல் சீவி, நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி உடலுக்கு நன்மை தரும். ஆனால் இஞ்சி தோல் உடலுக்கு விஷம்.

* தேவையான அளவு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

* தண்ணீர் நன்கு கொதிக்க வேண்டும். இஞ்சியின் சாறு முழுவதும் நீரில் இறங்கியவுடன், அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி காய்ச்சிய பாலை அதில் கலக்க வேண்டும்.

*அதனுடன் தேவையான அளவு தேன், பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பால் திரியாமல் இஞ்சிப் பால் / டீ தயாரிக்கும் வழிமுறை

இஞ்சியில் உள்ள protease பாலைத்திரிக்கின்றது. இதனைத் தவிர்க்க இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். கொதித்த பாலுடன் இந்த சாறைக்கலக்கவும்.

இஞ்சிப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

* நுரையீரல் சுத்தமாக்கப்பட்டு, சளி போன்ற தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

* வாயுத் தொல்லை வராமல் தடுக்கிறது.

* நம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு எடை குறைகிறது.

* இஞ்சியில் உள்ள விட்டமின் சி உடலில் கழிவுகள் தேங்க விடாமல் வெளியேற்றுகிறது. நல்லதொரு detoxification agent என்பதால் தினசரி உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் வெளியேறுகிறது.

* ரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புகளால் ஆன அடைப்பு இருந்தால் அதனை நீக்கி விடும்.
ஆகவே மாரடைப்பை தடுக்கிறது.

யார் குடிக்கக்கூடாது?

வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் போன்ற நோய்கள் (gastritis, ulcers & piles) இருப்பவர்கள் இஞ்சிப்பாலை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.


Dry ginger powder with milk or warm water once a day can be taken directly as a remedy for cold and cough symptoms. High levels of Vitamin C, magnesium and other minerals present in ginger root is extremely beneficial for health. It relieves cold, cough, asthma, breathing trouble, sore-throat, etc. Ginger lowers cholesterol from depositing in the arteries and prevents blood from clotting. Hence, it prevents heart attacks and stroke. People who suffer from gastritis, ulcers & piles are not advised to take this recipe.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course