தாகத்தை தணிக்க மண்பானைத்தண்ணீர் தான் சிறந்ததா?

Clay Pot

மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த மண்பானை மீண்டும் புழக்கத்திற்கு வரத் தொடங்கியுள்ளது வரவேற்க்கத்தக்க மாற்றம்.பானையில் சமைத்த சோறும், பானையில் ஊற்றி வைத்து குடித்த குடிநீரும் அவர்களது ஆரோக்கியமான வாழ்வியலை நமக்கு உணர்த்துகிறது.

அன்று முதல் இன்று வரை வழிப்போக்கர்களுக்கு குடிநீர் பந்தலில் மண்பானையில் தண்ணீரோ, நீர் மோரோ தான் வழங்குகிறார்கள். சாதாரண தண்ணீரில் தாது உப்புகள் நிரம்பி இருக்கும்…. மினரல் வாட்டர் என்ற பெயரில் நாம் விலைக்கொடுத்து வாங்கும் நீரில் கிடையாது.

மண்பானைத்தண்ணீர் ஏன் குளிர்ச்சியாக உள்ளது?

மண்பானையின் தனித்தன்மை என்னவென்றால் வெளியே எவ்வளவு வெயில் கொளுத்தினாலும் மண்பானை தன்னுள் இருக்கிற நீரை குளிரச் செய்யும். வெளியே நிலவும் தட்பவெப்ப நிலை மாற்றம் மண்பானைத்தண்ணீரை மாற்றாது. இதன் பின்னே பெரிய தொழில்நுட்பமும் அதற்கான இயந்திரமோ ஒன்றும் கிடையாது. மண்பானைகளில் நுண்துளைகள் நிறையவே இருக்கின்றன.

நீர் வைக்கப்பட்டிருக்கும் மண் பானைகளின் வெளியே வியர்த்திருப்பது போன்று நீர்த்திவலைகள் காணப் படும். மண்பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியாக தான் நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக்கும்.

இப்படி பானையின் வெப்பமும், பானையின் உள்ளே இருக்கும் நீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுகிறது. ஆகவே தான் கொளுத்தும் வெயிலில் கூட பானைத்தண்ணீர் குளிர்ச்சியாக உள்ளது.

ஒரு மண்பானை தண்ணீரை அறை வெப்பநிலையைவிட வெறும் 5 டிகிரி செல்சியஸ்அளவுக்குத்தான் குளிர்விக்கும். வெளியே வெப்பம் 35டிகிரி செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின்
வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தான் இருக்கும்

மண்பானை தண்ணீரின் சுவை கூட்டும் வழிமுறைகள்

* தண்ணீரில் சிறிது சீரகம் போட்டு கொதிக்க வைத்து அதனை பானையில் ஊற்றி வைக்கலாம்.

* வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு துளசியைப் போட்டு வைக்கலாம்.

Organic Root

* பானை நீரில் வெட்டிவேர் போட்டு வைக்கலாம்

* மண்பானையில் பூச்சிகள், தூசி விழாமலிருக்க, எப்போதும் பானையை மூடி வைக்கவும்.

உங்கள் உடலில் போதுமான நீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உடலின் கழிவுகள் வெளியேற நிறைய தண்ணீர் குடிக்கவும்.


Storing water in an earthen pot and drinking it is the best way to quench thirst. There is neither harm nor benefit when water is stored in glass vessels. But drinking earthen pot water or clay pot water helps in improving the body’s metabolism, virility and digestion. It has natural cooling springs and helps cooling water as clay is porous. Do not use soap or detergent to clean the clay pot, instead baking soda or salt can be used as a cleanser. Tulsi leaves, cumin seeds, Vetiver, etc can be added to water to get flavored water.


scroll to top