கருங்கூந்தல் வளர்ச்சிக்கு பயோட்டின் (B7 – Vitamin H)

முடி உதிர்தல், செம்பட்டை நிறத்தில், வலுவிழந்த கூந்தல், நுனி வெடித்த முடி என தலைமுடியின் அழகை கெடுக்கும் பிரச்சினைகள் என்றாலே பெரும் தலைவலி தான் பெண்களுக்கு. இதற்கு தீர்வாக தான் பயோட்டின் கலந்த ஷாம்பு, உணவில் பயோட்டின், பயோட்டின் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்கள். முதலில் பயோட்டின் என்ன என்று பார்ப்போம்.

பயோட்டின் (Biotin)

இது நீரில் கரையும் விட்டமின். முடி வளர்ச்சிக்கு முக்கியமான விட்டமின். அரிதாகவே பயோட்டின் பற்றாக்குறை வரும். அப்போது முடி உதிர்தல், தோல் வறட்சி ஏற்படும்.

முடி வளர்ச்சியில் பயோட்டின் பங்கு

Hair Growth

முடி வளர்ச்சிக்கு தேவையான கரோட்டின் எனும் புரதத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. பயோட்டின், தலையில் உள்ள முடியின் வேர்கால்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்ல உதவுகிறது. இதனால் தான் முடி உறுதியாக, அடர்த்தியாக வளருகிறது.

உணவில் பயோட்டின்

Biotin Rich Foods

உணவில் பயோட்டின் இருக்கும் வகையில் உணவுவகைகளை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம். முட்டை, பயறு வகைகள், உலர் பழங்கள், கொட்டைகள், முழு தானியங்கள், இறைச்சி ஆகியவற்றில் பயோட்டின் நிறைய உள்ளது. தினசரி ஒரு வேகவைத்த முட்டை உண்பதால் எளிதாக 25 micro gram பயோட்டின் கிடைக்கும்.

மருத்துவ ஆலோசனையின் பேரில் தினசரி மாத்திரைகளாக உட்கொள்ளலாம். பரம்பரை வழுக்கை என்றால் முடி வளருவது கடினம். ஆனால் புரதச்சத்து, விட்டமின்கள் பற்றாக்குறை எனும் போது பயோட்டின் எடுத்தால் நல்ல தீர்வு. தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பயோட்டின் உட்கொண்டால் தான் கூந்தல் வளர்ச்சியில் வேறுபாடு காணமுடியும்.

பக்க விளைவுகள் (side effects)

* அதிக அளவில் பயோட்டின் எடுத்துக் கொண்டால் தாடையில் வலி ஏற்படும்.

* கர்ப்பிணி பெண்கள் எடுக்க கூடாது

* அடிக்கடி சிறுநீர் கழித்தல்

* குமட்டல், வயிற்று போக்கு

* பிற மருந்து மாத்திரைகள் உடன் வினை

ஆகவே தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று, குறிப்பிட்ட அளவு தான் பயோட்டின் எடுக்க வேண்டும்.


Biotin is a B-complex vitamin supplement that can be found in food form. Consuming foods that contain biotin helps to contribute to hair growth. Biotin (Vitamin B7) is one of the best vitamins for hair thickness. It helps break down proteins. Insufficient biotin content in our body make hair and nails drier and more brittle and may lead to thinning and discoloration of the hair. Biotin is found in eggs, pulses, dry fruits and nuts, whole grains, meat. Intake of an egg a day gives 25micro gram biotin.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top