முடக்கத்தான் கீரையின் பயன்கள்

Balloon Vine

முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும், தோப்புகளில், வரப்போரங்களில் இது படர்ந்து இருக்கும். மழைக்காலங்களில் பச்சைப்பசேலென்று கொடி வீசிக் கிடக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

பொதுவாக வயது ஆக ஆக இன்றைய வாழ்வு முறைகளால் விரைவில் மூட்டுவலி  வந்து விடுகிறது. எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ் படிவங்கள்தான். இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

முடக்கத்தானை எப்படி சமைத்து சாப்பிடலாம்?
* முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

* இதன் இலைகளை பொடியாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம்.

* கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

* துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்து கீரைக் கூட்டும் செய்யலாம்.

முடக்கத்தான் இலை  தோசை

Dosa

இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதார‌ண‌த் தோசைமாவுடன் (ஒரு பெரிய‌ கிண்ண‌ம் அள‌வு) க‌ல‌ந்து, தோசை சுட்டால், க‌ச‌ப்பு சிறிதும் தெரியாது. நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

முடக்கத்தான் ரசம்

Rasam

கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர்விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, வழக்கம் போல இரசம் வைக்கவும். அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும். இந்த ரசம் செரிமானகோளாறுகளை நீக்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கு முடக்கத்தான்
வாரம் ஒரு முறை முடக்கத்தான் இலைகளை, அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துவரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும்.

இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வாதத்தினால் வரும் வீககத்திற்க்கு வைத்துக் கட்ட வீக்கம் வடியும்.

சித்தர் பாடலில் முடக்கத்தான்
“சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் – சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி”

– சித்தர் பாடல் – இதன் பயன் தெரிந்து தான் சித்தர்கள் பாடலாக பாடி வைத்துள்ளார்கள். ஆகவே

கிடைக்கும் போதெல்லாம் முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.


“Mudakathan Keerai” or Balloon vine plant has great medicinal property. Juice of this leaves is a good hair growth enhancer and it is used as eardrop to treat Earache (pain in the Ear). The extract is a good herbal treatment for Cancer. Mudukathan keerai treats all cold and cough related problems. This spinach is used to make different recipes such as mudakathan dosai, mudakathan rasam, mudakathan keerai thuvayal, keerai soup, etc. It is commonly used to treat paralysis and joint pain. Get benefited of mudukathan keerai by following the above procedure to make recipes.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course