ஆயுர்வேதம் என்பது நமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்று என்பது நாமறிந்ததே. வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்கள் செய்ய முனைந்தாலே போதும் ஆரோக்கிய வாழ்வினை நோக்கி முதல் படி எடுத்து வைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
உணவே மருந்து
என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், மருந்தே வாழ்க்கை எனும் பெருந்துயர் நிலை நேராது. இதற்காக பெரிய ஆராய்ச்சி தேவை இல்லை. நமது பாட்டி இந்த உணவை சாப்பிட்டார்களா என்ற கேள்வியுடனே புரோட்டாவையும், பீட்ஸாவையும் உண்ணும் முன் உங்களையே நீங்கள் கேள்வி கேட்டு கொள்ளுங்கள்.
அவர்கள் காலத்தில் அதிக உடற்பருமன், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என உணவுச்சார்ந்த நோய்கள் பெரும்பாலும் கிடையாது. தொற்று நோய்களால் கொத்து கொத்தாக மக்கள் மடிந்தது உண்டு.
உடல், மனநலத்தில் உணவின் பங்கு
ஆரோக்கியத்தின் அஸ்திவாரமே உணவுத் தான். உணவே ஒரு மனிதனின் உடல், மனம் இரண்டையும் ஆளுமை செய்கிறது. கொடும் பசியில் இருப்பவரிடம் ஏதாவது கேள்வி கேளுங்கள், எத்தனை சாந்தமானவர் என்றாலும் சிடுசிடு வென்று தான் பதில் சொல்வார். நன்கு சாப்பிட்டு உண்ட மயக்கத்தில் இருப்பவரிடம் வேலை கொடுத்து பாருங்கள், அதற்கு அவரது எதிர்வினை எப்படி இருக்கும் என்று தெரியும் தானே? எளிய உணவு, அளவோடு உண்டவர் எல்லா சூழலுக்கும் ஒத்துழைப்பார்கள்.
நெல்லிக்காய்
ஆயுர்வேதத்தில் ராஜகனியாக போற்றப்படும், விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய். வாத, பித்த, கபம் தோஷம் உள்ள உடல்நிலைக்கும் ஏற்றது. தினசரி நெல்லிக்காய் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து பருகலாம்.
ஏலக்காய் மற்றும் இஞ்சி
25 வித ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidants) உள்ள இஞ்சியை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் புற்றுநோய், நீரிழிவு, ஆர்த்தரிடிஸ் இருந்து தவிர்க்க இயலும்.
ஏலக்காய் இரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்துகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. ஆகவே உடலும் மனமும் புத்துணர்வு பெறுகிறது. தினசரி இஞ்சி டீ, ஏலக்காய் டீ வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
மிளகு மற்றும் சீரகம்
கிராம்பு
சிறந்த வலிநிவாரணி, பூஞ்சைகள், பாக்டிரியா கொல்லி. மாங்கனிசு கிராம்பில் நிறைந்து இருப்பதால் நரம்பு மண்டலத்தை சீராக்குகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களை தூண்டும்.
ஓமம்
இதயத்திற்கு நண்பன் ஓமம். இதில் உள்ள நியாசின், தைமால் இதயத்திற்கு நன்மை தரும். ஓமத்தை நீரில் இட்டு கொதிக்க வைத்து தினசரி ஒரு தம்ளர் பருகலாம்.
செலவில்லாத செயல்பாடுகள் மருத்துவச்செலவில் இருந்து காப்பாற்றும்.
Eight recommendations by Ayurveda for good health – Ginger, Cardamom, Pepper, Gooseberry, Carom seeds, Cumin, Cloves and Honey. Cloves act as pain killer and the presence of Manganese regulates nervous system. Carom seeds are friend to heart. Vast benefits dumped in Cumin and pepper. Cardamom stimulates digestive system. Including ginger in daily diet can treat cancer, diabetes, arthritis. Gooseberry extract mixed with honey helps constipation.