மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Executive Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 40 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid) மேலாண்மை : மத்திய அரசு பணி : Executive Trainee
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், பி.எஸ்சி (பொறியியல்) துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.60,000 மாதம் ரூ.1,80,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
தகுதிகள் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் 15.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் GATE 2021, குழு விவாதம், நேர்முகத் தேர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 இதர விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினை றெவும் https://www.powergridindia.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும். அல்லது மேலேஉள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News