தங்க நகைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!!

Jewel

கால் பவுன் தங்கமாவது வருடம் ஒருமுறை வாங்க வேண்டும் என்பதே இந்திய நடுத்தர குடும்பங்களின் சேமிப்பு திட்டம். தங்கம் இல்லாத இந்திய குடும்ப விசேஷங்கள் நிறைவு பெறாது.உலகிலே யே வைத்து ஆசியர்களிடம் தான் தங்கம் சேமிப்பாக குவிந்து கிடக்கிறது. நம் வீட்டு பொருளாதாரம் மட்டும் அல்ல நாட்டு பொருளாதாரமும் தங்க கையிருப்பு பொறுத்து தான்.

குருவி சேமிப்பது போல் சிறுக சிறுக சேமித்து, தங்கம் வாங்குவதில் குறியாக இருப்பவர்கள் தரமான தங்கமாக வாங்க தெரியாமல் ஏமாந்து விடுகிறார்கள். உலகின் எந்த மூலையிலும் பணமாக மாற்றிக் கொள்ளக்கூடிய தங்கத்தை கவனத்துடன் வாங்க வேண்டும்.

நீங்கள் தங்க நகைகள் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்
* தங்கம் வாங்கும் போது அதன் தூய்மை, தரம் மற்றும் விலை போன்றவற்றை கவனித்து வாங்க வேண்டும்.* தங்கத்தினை கேரட் எனப்படும் அலகால் அளக்கிறார்கள்.

* தூய தங்கம் மென்மையானது என்பதால் தங்க நகைகளாக பயன்படுத்த முடியாது. எனவே தான் வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்ற கலவையை தங்கத்துடன் சேர்ப்பதால் நகைகள் வலிமையுடனும் நீண்ட நாள் பயன்படுத்துவதற்க்கு ஏதுவாக உள்ளது.

* 18k, 22k, 24k என தங்கத்தின் தூய்மையை கொண்டு அளவிடப்பட்டு வகைப்படுத்தப்படுகிறது.

* தங்கத்தின் தூய்மை, அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள கலவை, அதன் வேலைப்பாடுகள், செய்கூலி ஆகியவற்றின் அடிப்படையில் தான் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
Jewellery

* தங்கம்  என்றாலே மஞ்சள் நிறம் தான் என்று நம் மனதில் பதிந்து விட்டது. பொன்னிற தங்கம் மட்டுமன்றி அதன் உடன் சேர்க்கும் சேர்மானங்களை பொறுத்து, வெள்ளை நிற தங்கம், ரோஸ் தங்கம், பச்சை என தங்கத்தில் பல்வேறு நிறங்கள் உள்ளன.

* சுத்தமான தங்கத்துடன் மற்ற உலோகத்தை கலப்பதால், வேறுபட்ட நிறங்கள் கொண்ட தங்கத்தை பெறலாம்.

* பலேடியம் மற்றும் வெள்ளி போன்ற வெள்ளை உலோகங்களை கலப்பதால் வெள்ளை நிற தங்கம் உருவாகிறது. பெரும்பாலும் அமெரிக்காவில் திருமண நகைகளாக வெள்ளை நிற தங்கம் தான் பயன்படுகிறது.

* தங்கத்துடன் செம்பு கலப்பதால் ரோஸ் நிற தங்கம் கிடைக்கிறது. உலகம் முழுவதும் மஞ்சள் நிற தங்கம் தான் மக்களின் உள்ளம் கொள்ளை கொண்ட நிறம்.

* கல் நகைகளுக்கு மறுமதிப்பீடு குறையும் என்பதால் அதனையும் கருத்தில் கொண்டு தான் நகை வாங்க வேண்டும்.

* இந்தியா உட்பட பல நாடுகள் ஒவ்வொரு தங்க நகைகளையும் கேரட் அல்லது அதன் தூய்மையை கொண்டு அரசாங்கம் தெளிவான குறிப்பிட்ட முத்திரையால் குறிப்பிட சொல்கிறது.

* நமது நாட்டில் ஹால்மார்க் திட்டத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பிரபலமான தங்க நகை கடைகள் அவர்களது முத்திரை மற்றும் அடையாள முத்திரைகளை அவர்களே தங்க நகைகளில் முத்திரையிடுகின்றனர்.

* இந்திய அரசாங்கம் பிஐஎஸ் எனப்படும் ஒரு தனி அமைப்பை உருவாக்கியுள்ளது. பிஐஎஸ் ஹால்மார்க் திட்டம் எனப்படும் சர்வதேச ஹால்மார்க் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. பிஐஎஸ் எனப்படும் ஹால்மார்க் திட்டத்தின் கீழ் தங்க நகைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற நகை கடைகள் தங்களது நகைகளை பிஐஎஸ் ஹால்மார்க் அங்கீகாரம் பெற்ற மையத்திலிருந்து பெறலாம்.

Jewellery

* தங்கத்தை ஒரு நம்பிக்கையான கடையில் தான் வாங்க வேண்டும். அந்த கடையில் ஏற்கெனவே நகை வாங்கியவர்களின் அனுபவம் அல்லது நட்பு, உறவுகளிடம் யதார்த்தமாக கடைகளை விசாரித்து வைத்து கொள்ளவேண்டும்.

* தங்க ஆசாரிகளுடன் நகை செய்து வாங்குவதாக இருந்தாலும் நம்பிக்கையான நபரிடமே செய்து வாங்க வேண்டும். ஆசாரியுடன் நீண்ட கால உறவு இருக்க வேண்டும். அதில் நம்பகத்தன்மையும் ஆசாரியிடம் தொழில் நேர்மை இருந்தால் மட்டுமே வாங்குவது நலம்.


We Indians love gold mainly women. Gold plays a vital role in auspicious occasions. Buying gold jewellery serves dual purposes, not only is it an investment but it is also a great fashion accessory. Karat is the term used to measure the gold content or purity. Few things to ensure before buying gold – know the purity(Pure or Impure), making charges, man-made or machine made ornaments, check the weight, off/on season, BIS hallmark, buy back value, jewellery store. Gold is yellow in color, it is white when more quantity of silver is added and rose when more copper content present in it.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top