சூளைமேடு காமராஜர் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் அரிநாராயணன்(43). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு வீட்டின் முன்பு டியோ ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார். மறு நாள் காலையில் பார்த்த போது ஸ்கூட்டர் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அரிநாராயணன் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்படி காமராஜர் நகரில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார் விசாரணை நடத்தியபோது பைக்கில் வரும் 3 பேர் கள்ளச்சாவி போட்டு ஸ்கூட்டரை திருடி சென்றது தெரியவந்தது. பின்பு அந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுவந்துள்ளனர் .அப்போது 3 வாலிபர்கள் போலீசாரை பார்த்த உடன் அவர்கள் வந்த பைக்கை போட்டு விட்டு தப்பி ஓடி முயன்றனர்.
இதை பார்த்த போலீசார் 3 பேரையும் துரத்தி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், திருமழிசையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்றும், இவன் தனது நண்பர்களான பெரும்பாக்கம் எழிநகரை சேர்ந்த 16 வயதுடையே 2 சிறுவர்கள் என தெரியவந்தது. இவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானதால் 3 பேரும், பணத்திற்காக இரவு நேரங்களில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 6 பைக்குகள் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News