மனைவியை கொலை செய்த 52 வயது  காம கொடூரனுக்கு மரண தண்டனை

புதுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்த 52 வயது  காம கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தேனி பட்டியை  சேர்ந்த 52 வயது  முருகேசனுக்கு மூன்று மனைவிகள் 11 குழந்தைகள். இந்த நிலையில் இவரது இரண்டாவது மனைவிக்குப் பிறந்த 17 வயது மகளை 2017ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்து கொண்டுள்ளார். இந்த காமக்கொடூர முருகேசன் இதை வெளியில் கூறினால் தாயையும், மகளையும் கொன்று விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.


இந்த நிலைகளில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்வதில் இரண்டாவது மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதையறிந்த முருகேசன் இரண்டாவது மனைவி உயிருடன் இருந்தால் அவளை அடைய முடியாது என்ற ஆத்திரத்தில் அவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கொடூரமாக கொலை செய்துவிட்டு ஏதும் அறியாதவன் போல் வீட்டுக்கு வந்துள்ளார்.


ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் உண்மைகள் அனைத்தும் தெரியவந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த புதுக்கோட்டை நீதிபதி சந்தியா காம கொடூரனுக்கு கொலை வழக்கில் மரண தண்டனை குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும் இன்னொரு பிரிவுகளில்  7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் இதர பிரிவுகளில் இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும் மொத்தம் மூன்று லட்ச ரூபாய் அபராதமும்  விதித்து தீர்ப்பளித்தார். ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார். முருகேசனுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை என்பது சாகும் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதாகும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course