த்ரீ- இன் – ஒன் தக்காளி அல்வா

தக்காளி அல்லாவின் நிறம் மட்டும் கவர்ச்சிகரமானது அல்ல. அதன் சுவையும் இனிப்பும், காரமும், புளிப்பும் கலந்த கலவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள். நிறைய எண்ணெய், நெய் விட்டு கிளறி என அல்வா செய்பவர்களின் பொறுமையை சோதிக்கும் செய்முறை கிடையாது.

Halwa Recipe

சமையல் கற்றுகொள்பவர்கள் கூட செய்து பார்க்கலாம் அத்துணை எளிதாக செய்ய கூடிய அல்வா. அல்வாவை உண்பவர்களின் வயிற்றுக்கும் கேடு விளைவிக்காது. வீட்டில் இருக்கக்கூடிய எளிய பொருட்கள் கொண்டு தயாரிக்கலாம். ரொம்ப புகழ்ந்து விட்டதால் நேரடியாக ரெசிபிக்கு போகலாம்.

Servings : 2 – 3
Time : 40 – 45 minutes
Cooking time : For boiling Tomatoes : 8 – 10 minutes
Preparation : 40 – 45 minutes

தேவையான பொருட்கள் :
பெரிய தக்காளி – 4
சர்க்கரை – ¾ கப்
முந்திரி பருப்பு
கிஸ்மிஸ்
நெய்

செய்முறை :
* தக்காளியை பத்து நிமிடம் வேகவிடவும்.

* ஆறிய பின் தோலை நீக்கவும்.

Paste

* நறுக்கிய தக்காளி துண்டுகளை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து எடுக்கவும்.

* அதே எண்ணிக்கையில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி வெந்து வரும் போது தேவையான அளவு மிளகாய் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவிடவும்.

* மேற்கண்ட கலவையுடன் இனிப்பு சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

* தக்காளி வெந்து கண்ணாடி போல பளபளப்புடன் வரும் போது முந்திரி திராட்சையை தூவி இறக்கவும்.

* இந்த அல்வா வழக்கமான அல்வாப்போல இருக்காது.

* இதனை பிரியாணி, புலாவ், பூரி, உப்புமா,சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

தக்காளி விலை மலிவாக கிடைக்கும் போது அடிக்கடி செய்து பார்க்கலாம்.


Tomato Halwa or Thakkali Halwa in Tamil is a different tasty halwa. It is a sweet, sour and pungent recipe. Red ripe tomatoes are the main ingredient in this delicious dessert where only the tomato pulp is used. Tomato pulp is made into paste and cooked on a low heat until the liquid dries up. Cashews and almonds fried in ghee
is spreaded in the halwa to add flavor. It can also used as a side dish for poori, chapati, pulav, upma and biriyani.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top