மாங்காய் சீசன் ஆரம்பமாகி விட்டது மாங்காய் சாதம் செய்து சாப்பிடுங்கள்!

சித்திரை பிறந்தாலே மாங்காய் சீசன் ஆரம்பமாகிவிடும். நல்ல புளித்த மாங்காய் கொண்டு ஈஸியாக தயாரிக்கக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த மேங்கோ ரைஸ். புளிப்பும் காரமும் கலந்த மாங்காய் சாதமும் தேங்காய் துவையல் இருந்தால் போதும் ஆசை தீர உண்ணலாம்.

 

 

தேவையான பொருட்கள்:

சாதம் – 1 கப் , துருவிய தேங்காய் – 3/4 கப், எண்ணெய் – தாளிப்பதற்கு , கொத்தமல்லி  , நிலக்கடலை – விருப்பம் போல, பச்சை மிளகாய்  -2, மாங்காய் – 1, கறிவேப்பிலை – ஒரு ஈர்க்கு, பெருங்காயம் – 1 சிட்டிகை.

தாளிக்க :

கடுகு ,கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு , மஞ்சள் – 1 ஸ்பூன், உப்பு – (சுவைக்கேற்ப)  ,வெந்தயம் -1 ஸ்பூன்

செய்முறை :

 • உதிரியாக வடித்த சோற்றில் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து மெல்ல கலந்து ஆறவிடவும்.
 • சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வர வேண்டுமென்றால் அரிசி வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டுக் கொள்ளலாம்.
 • ஒரு மாங்காயை எடுத்து நன்றாக துருவிக் கொள்ளுங்கள்.
 • வெந்தயத்தை வறுத்து கரகரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளுங்கள் .
 • ஒரு கடாயை அடுப்பில் வைத்து , அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
 • எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்த்து கொள்ளவும்.
 • இப்பொழுது தோல் உரித்த நிலக்கடலையை சேர்த்து  பொன்னிறமாக வறுக்கவும்.
 • அதில் பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் துருவிய தேங்காய் இவைகளை சேர்த்து 1-2 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும் .
 • வேக வைத்த அரிசியை கடலை கலவையுடன் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
 • பின்னர் துருவிய தேங்காய், கொத்தமல்லி தழை மற்றும் உப்பு இவற்றை மேலே தூவி நன்றாக கலக்கவும்.
 • கடைசியாக வெந்தயப் பொடி தூவி நன்றாக கிளறவும்.
 • தேங்காய் அல்லது கொத்தமல்லி துவையல் உடன் பரிமாறவும்.

நாவிற்கு சுவையான மாங்காய் சாதம் தயார். கர்ப்பிணி பெண்கள் விரும்பி உண்பார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு நெல்லிக்காய் துவையல் உடன் பரிமாறவும்.

 

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas