காளான் பிரியாணி

மட்குண்ணி தாவரமான காளான் சுவையும், ஆரோக்கியமும் தரும் இயற்கையின் அதிசயம். விட்டமின் டி அதிகம் உள்ள உணவு இது. உண்ணக்கூடிய காளான்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர் சீனாவும், மிகப்பெரிய காளான் ஏற்றுமதியாளர் போலந்து மட்டும் அல்ல இன்று உலகின் அனைத்து பகுதிகளிலும் காளான் உற்பத்தியும் அதன் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

Button Mushroom

சிப்பிக்காளான், பட்டன் காளான் தான் நமது ஊரில் அதிகம் கிடைக்கும் ரகங்கள். பளிரென்று வெள்ளை வெளெரென்று இருக்கும் காளான்களை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்தவேண்டும்.

காளான் சூப், காளான் ஃப்ரை என எத்தன்னை ரெசிபி இருந்தாலும் காளான் பிரியாணி தான் டாப் சுவையில்.

Mushroom Biriyani

Preparation time – 30 minutes
Cooking time – 30 minutes
Category – rice/veg

தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி – 1/4 கிலோ
காளான் – 1 பாக்கெட்
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்
நெய்
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
சோம்பு – 1ஸ்பூன்
நட்சத்திர சோம்பு – 1
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி
புதினா
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு சோம்பு, பிரியாணி இலை, நட்சத்திர சோம்பு, ஏலக்காய், கிராம்பு என அனைத்து பிரியாணி மசாலாக்கள் சேர்த்து தாளிக்கவும்.

* பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.

* தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கிக் கொள்ளவும்.

* மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

* பிறகு நறுக்கி வைத்துள்ள காளான் சேர்த்து நன்றாக கிளறவும்.

* கொத்தமல்லி, புதினா மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்.

* இரண்டு நிமிடம் கழித்து அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் குக்கரை மூடி விடவும்.

* அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து தீயை அணைத்துவிடவும்.

சுவையான காளான் பிரியாணி தயார். தயிர் பச்சடி உடன் அட்டகாசமான விருந்து.


Mushroom(Kaalaan) biriyani is a popular South Indian spicy delicious recipe mostly using button mushroom type. Button mushrooms are the most consumed mushrooms. This biriyani is made in different styles such as chettinad style kovai style, etc. The fiber, potassium and vitamin C content in mushroom promotes cardiovascular health. Potassium and sodium work together in the body to help regulate blood pressure. Mushroom has extraordinary health benefits that includes fighting cancer and renewing cells. Button mushrooms are very low in calories and carry vitamin D. Prepare this delious biriyani by following the above procedure.


Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas