சமையலறை குறிப்புகள் – 1

சமையலறை பரபரப்புகளில் இருந்து விடுபட வேண்டும் எனில் சிறிது மெனக்கிட்டால் போதும். வாரம் ஒரு நாள், தினம் அரை மணி நேரம் என அவரவர் வசதிக்கேற்ப சமையல் முறைகள், சமையல் அறை வசதிகள் பொறுத்து திட்டமிடல் அவசியம்.

பொத்தாம் பொதுவாக சில குறிப்புகளை பார்ப்போம். இயன்றவரை சோம்பல் படாமல் கடைப்பிடித்தால் நேரம் மிச்சம்.ரிலாக்ஸாக சமைக்கலாம்.சமைக்கும் உணவில் சுவையை கூட்டலாம்.

* வெண்ணெயை சிறு துண்டுகளாக நறுக்கி பிரிட்ஜில் வைத்து கொள்ளவும்.அல்லது வெண்ணெய் வாங்கும் போது க்யூப்களாக கிடைப்பதை வாங்கவும்.

* ஃபில்டர் காபி போடும் போது, பில்டரில் காபியுடன் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கவும். அதன் பிறகு சுடுதண்ணீர் ஊற்றி டிகாஷன் எடுக்கவும்.

Add Milk

* முட்டை ஆம்லெட் பொங்கி வர ஆம்லெட் கலவையுடன் சிறிது பால் சேர்த்து அடிக்கவும்.

* காலிஃப்ளவர் உடன் பால் சேர்த்து வேகவிட்டால் பூவின் நிறம் மாறாது.

* எலுமிச்சை நிறைய இருந்தால் சாறு பிழிந்து ஐஸ்டிரேயில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தவும்.

* பிரியாணி, புலாவ்க்கு அலங்காரம் செய்ய வெங்காயத்தை ஃப்ரை செய்யும் போது சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்தால் சீக்கிரம் ப்ரௌன் நிறம் கிடைக்கும்.

* துவரம் பருப்பு வேக வைக்கும் போது விளக்கெண்ணெய் விட்டு வேகவிடவும்.நல்ல மணமாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு பிசையும் போது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.

* பச்சை பட்டாணி வேகவைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்து வேகவிடவும்.அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.

* ஆப்ப‌த்துக்கு, இடியாப்பத்துக்கு தேங்காய்பால் ஊற்றி சாப்பிட‌ பால் எடுக்கும் போது அத்துட‌ன் ஏலாக்காய் சேர்த்து அரைத்தால் ந‌ல்ல‌ ம‌ண‌மாக‌ இருக்கும்.

Cardamom

* தின‌ம் இஞ்சி டீ குடிப்ப‌வ‌ர்க‌ள், இஞ்சியை கொர‌ப்பாக‌ ஏல‌க்காய் சேர்த்து அரைத்து பிரிட்ஜில் வைத்து கொள்ளலாம்.

அடுத்த நாள் என்ன சமைக்கப்போகிறோம் என்பதை திட்டமிடல் சமையல் பளுவை குறைக்கும். சுத்தமான சமையல் அறை சமைக்கும் ஆர்வத்தை தூண்டும்.


Kitchen tips and tricks are to make life much easier. There are numerous tips to prepare tasty items, to save time in kitchen, to preserve items, to cook smart, to maintain kitchen, to make recipes easy, mainly to get appreciation. Tip such as, “Peel ginger with a spoon” helps everyone as it is used in most of the spicy recipes. Because, Peeling Ginger with its bumps and unevenness can be tricky for everyone. Likewise, number of useful kitchen tips are shared here to work for everyone.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course