இரானி போலா – ரம்ஜான் ஸ்பெஷல்

Irani Pola

“போலா”, என்பது மலபார் முஸ்லிம் வீடுகளில் செய்யப்படும் சிக்கன் கேக். இதனை முட்ட போலா, மலபார் சிக்கன் போலா என்றும் அழைப்பர். ஓவன் இல்லாமல் செய்யப்படும் கேக் இது. ரமலான் நோன்பு திறக்கும் போது உண்பதற்கு செய்யும் ஸ்நாக் இது.

இந்த போலாவை பிரட், முட்டை, பனானா, ஆப்பிள், சிக்கன், மீன், மட்டன் என்று நம் கற்பனைக்கு ஏற்ப விதவிதமாக செய்யலாம்.

தேவையான பொருட்கள் :
முட்டை – 3
மைதா – 1/2 கப்
கோதுமை மாவு – 1/2கப்
பால் – 1 கப்
எண்ணெய் – 1 கப்
உப்பு

மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அடித்து கொள்ளவும். கலந்த மாவை தனியே வைக்கவும். முட்டை வாசனை தெரியாமல் இருக்க தான் மிளகுத்தூள்.

மசாலா செய்ய தேவையான பொருட்கள் :
எலும்பு இல்லாத சிக்கன் – 250கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
சிவப்பு மிளகாய் தூள்
மிளகுத்தூள்
கரம் மசாலா
கொத்தமல்லி தழை
எண்ணெய்

அலங்கரிக்க :
சிவப்பு, பச்சை குடை மிளகாய்
வெங்காயத்தாள்

செய்முறை :

Chicken

* சிக்கன் துண்டுகளை சிறிது உப்பும் மிளகுத்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்த சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

* வாணலி சூடானதும் எண்ணெய் விட்டு, நறுக்கிய இஞ்சியை போட்டு வதக்கவும். இஞ்சியின் நிறம் மாறும் போது நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* அதன்பின் மிளகாய் தூள், மிளகுத்தூள், தக்காளி, உப்பு சேர்த்து வேகவிடவும். தக்காளி மசிந்தவுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது மசாலா தயார்.

* ஓவனில் செய்தாலும் நன்றாக வரும். ஓவன் இல்லாமல் கூட பழைய இரும்பு தோசைககல் அல்லது நான் ஸ்டிக் தோசைக்கல்லை கேஸ் ஸ்டவில் வைத்து சூடாக்கவும்.

* அதன்மீது நான் – ஸ்டிக் சாஸ்பேனை நெய் அல்லது வெண்ணெய் தடவி சூடான தோசைக்கல்லின் மீது வைக்கவும்.

* சாஸ்பேன் சூடாகியதும், அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்றவும்.

* மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் அந்த மாவை வேகவிடவும். மாவு வெந்ததற்க்கு அடையாளமாக கொப்புளங்கள் தோன்றும்.

* மாவுக்கலவையின் மீது சிக்கன் மசாலைவை தூவவும்.

* இதன் மேலே மீண்டும் முட்டை கலவையை ஊற்றவும்.

* முட்டை கலவையின் மீது ஸ்லைசாக நறுக்கிய குடை மிளகாய், வெங்காயத்தாள், சிக்கன் துண்டுகள், கொத்தமல்லி தழை தூவி என விருப்பம் போல அலங்காரம் செய்யவும்.

Chicken Pola

* 25 நிமிடங்கள் கழித்து டூத் பிக், கத்தி, ஈர்க்கு ஏதாவது ஒன்றை கொண்டு குத்திப் பார்க்கவும்.

* மாவு ஒட்டாமல் வந்தால் சிக்கன் போலா தயார். ஸலைஸ்களாக வெட்டி பரிமாறவும்.


Irani Pola, Mutta Pola, Malabar Chicken Pola, Irachi Pola, Erachi Cake, Erachi Pola, all mean the delicious chicken cake, popular in Malabar district of Kerala. It is a spicy chicken cake. A wide variety of Pola can be made using eggs, bread, banana, apples, meat, etc. It can be made with or without an oven. It is possible to prepare this delicious spicy recipe simply at home by following the given procedure.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com