ஈஸியாக கூழ் வடகம் போடுவது எப்படி?

நல்ல மழைக்காலம், சுடச்சுட ரசசாதம் அதனுடன் மொறுமொறுப்பாக வடகம் இப்படி ஒரு இரவு உணவை ரசித்து சாப்பிடாதவர்கள் உண்டா?

பழைய சோறும் கொத்தவரங்கா, மிதுக்க வத்தலும் வைத்து உண்ட அனுபவம் உள்ளவர்களுக்கு தான் தெரியும் அதன் ருசி.

கூழ் வத்தல்

Koozh Vadagam

கூழ் வத்தல் என்பது எளிதாக செய்ய கூடிய வத்தல் அல்லது வடகம். இரண்டு முறைகள் உண்டு.அவை

1. ஒருபங்கு அரிசி மாவில் அரை பங்கு ஜவ்வரிசி மாவு உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். (மாவு கலவை – 1)

அல்லது

2. ஒரு டம்ளர் பச்சரிசி மற்றும் அரை டம்ளர் ஜவ்வரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு மை போல அரைத்து உப்பு சேர்த்து நீர் விட்டு கலந்து கொள்ளவும்.

* பாத்திரத்தில் ஆறு அல்லது எட்டு டம்ளர் (அரிசி மாவு அளந்த கப்) கொதிக்க விடவும்.

* இரண்டு கப் கொதிக்கும் நீரை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

* நன்கு கொதிக்கும் நீரில் கரைத்த மாவை ஊற்றி கூழ் செய்யவும்.மாவு வெந்து வரும் போது ரொம்ப இறுகினால் , ஏற்கெனவே எடுத்து வைத்த சுடுநீரை கலந்து தளர்வாக்கவும்.

* சுத்தமான வெள்ளை வேட்டியில் கரண்டி கொண்டு ஆறிய கூழை இடவும்.

* இரவே கூழ்வடகம் இட்டு பேன் காற்றில் வைத்து, காலையில் மாடியில் காய வைப்பது தான் எளிது. காலை வெயிலில் கூழ் வடகம் இடுவது கொடுமை.

* பெருங்காயம், சீரகம், பச்சை மிளகாய்விழுது, எலுமிச்சை சாறு என அவரவர் ருசிக்கேற்ப சேர்த்தும் செய்யலாம்.

கிள்ளு / பக்கோடா வடகம்

Killu Vadam

பழைய சோறு நிறைய மீந்து இருந்தால், உப்பு, பெருஞ்சீரகம், வெங்காயம் இடிச்சு சோறோடு கலக்கவும். அதனை நன்கு கைகளால் பிசைந்து வெள்ளை துணியில் கிள்ளி போடவும். மூன்று அல்லது நான்கு நாட்களில் காய்ந்து விடும்.

ஈரமில்லாத, காற்று புகா டப்பாவில் போட்டு வைக்கவும். ஒரு வருடம் ஆனாலும் கெடாது.


Koozh vathal is a popular South Indian Papad Variety made using rice flour. Killu vadam/vadagam or killu vathal or pakoda vadagam is made using left over rice(Pazhaya sadham). In many houses, every year during summer, these vadam recipes are prepared in large quantities and stored in dried air-tight container to use it for year. It is important to dry vathal properly and store it for long term use. Follow the procedure to make these papad varieties for side dish or snack.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com