கேழ்வரகின் மணம் வாய்ந்த உணவுகள்!

கிராமத்து சமையலில் கேழ்வரகு தான் பிரதானம். விலை மலிவு, சமைக்கும் முறைகளும் எளிது. சிறு குழந்தைகள் முதல் அனைவரும் உண்ணத் தகுந்தது. ராகி, ராயி, ஆர்யம், கேப்பை என பல்வேறு பெயர்களில் அழைத்தாலும் அதன் சுவையும் பலன்களும் மிதமிஞ்சியது.

Kelvaragu

நமது ஆரோக்ய உணவுகளின் பட்டியலில் முதல் இடத்தை வகிப்பது கேழ்வரகு. நம் உடலுக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்து, புரதம், இரும்புச் சத்து கேழ்வரகில் அதிகம் உள்ளது. க்ளுட்டன் இல்லை என்பதால் (gluten free) உணவுக் கட்டுப்பாடு கடைப்பிடிப்பவர்கள் கேழ்வரகை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

கேழ்வரகில் செய்த பண்டங்களின் நிறம் வேண்டுமானால் குழந்தைகளை கவரும் வகையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் சுவையும் மணமும் அது தரும் சக்தியும் வேறு எந்த ஜங் புட்டுக்கும் கிடையாது.

கேழ்வரகு உடல் சூட்டை அதிகரிக்கக் கூடியது. அதனால் கேழ்வரகை எப்போதும் தனியாக உண்ணாமல், குளிர்ந்த பொருளுடன் அதாவது தயிர், கீரைகளுடன் சேர்த்து செய்து சாப்பிடுவதே நல்லது. கூழ் செய்தால் வெங்காயம், மோர் சேர்த்து, அடை செய்தால் வெல்லம், தேங்காய் சேர்த்து, என்று செய்வதால் கேழ்வரகிலிருந்து கிடைக்கும் நல்ல பலனை நம்மால் பெற முடியும். சில சுவையான ரெசிபிகளை பார்ப்போம்.

1. கேழ்வரகு காரடை

Ragi Adai

தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 1 கப்
வேக வைத்த காரமணிப்பயறு – 1/4 கப்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் – சிறிதளவு
சுடுதண்ணீர் – மாவு பிசைய

செய்முறை :
* கேழ்வரகு மாவை லேசாக வெறும் வாணலியில் சூடாக்கவும்.

* அடுப்பில் இருந்து இறக்கி அதோடு, வேக வைத்த காராமணி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு போதிய சுடுதண்ணீர் விட்டுப் பிசையவும்.

* சிறிய உருண்டைகளாக உருட்டி 1/4 அங்குல கனத்திற்கு அடை போல சிறிய வாழை இலைகளில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும்.

* இலையோடு அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

2. கேழ்வரகு முருங்கை கீரை அடை
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு : 1 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய் : 2
முருங்கைக்கீரை : 1 கப் (உருவி வைத்துக்கொள்ளவும்)
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : தேவைக்கேற்ப

செய்முறை :
வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போட்டு வதக்கவும்.

வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரதுணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

3. இனிப்பு ராகி தோசை

Ragi Dosa

தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 100 கிராம்
வெல்லம் – 50 கிராம்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு – 4 டீஸ்பூன்
நெய் – ஒரு கப்

செய்முறை :
வெல்லத்தைப் பொடித்து கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். இதனுடன் அரிசி மாவு, ஏலப்பொடி சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் நெய் விட்டு, இந்த மாவை தோசையாக வார்த்து எடுக்கவும். எண்ணற்ற கேழ்வரகு உணவுவகைகள் உண்டு.


Ragi or finger millet is called as Kezhvaragu in Tamil which is one of the most nutritious and healthy cereals. Ragi is best food for weight control, diabetes and a cooling the body. It reduces cholesterol, good source of protein and amino acids, treats anemia, helps digestion, increases lactation, reverts skin aging. It contains high amounts of proteins, calcium, and iron. It is gluten-free, low in fat, absorbable and easily digestible. Number of recipes can be made using ragi such as Ragi vada, Kezhvaragu kaara adai, sweet Ragi dosa, Ragi semiya and much more.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course