வீட்டில் தயாரித்த இணை உணவு ஏன் குழந்தைகளுக்கு தர வேண்டும்?

இணை உணவு என்றால் என்ன?
குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் திட உணவுகளே இணை உணவுகள் எனப்படும். வெறும் தாய்பால் மட்டுமே போதாது. குழந்தையின் வளர்ச்சிக் காலத்தில் தாய்ப்பாலோடு சேர்த்து இணை உணவு கொடுப்பது மிக முக்கியம்.

இணை உணவு வீட்டிலே தயார் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.டின்னில் அடைத்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

கர்ப்பகாலத்தில் தாய் உண்ட உணவு மற்றும் தாய்ப்பாலில் ருசித்த ருசி மூளையில் பதிவாகி இருப்பதால் , குழந்தை எளிதில் வீட்டு உணவை பழகிக்கொள்ளும்.

எப்பொழுது இணை உணவு, கொடுப்பது என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு தாயினுடையது. ஏனெனில் தாய்ப்பாலின் அளவு குறையும் போது, குழந்தையின் பசி தீராத போது, இதனை புரிந்து கொள்ளும் தாய், இணை உணவை ஆரம்பிப்பது நல்லது.

இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது?
குழந்தையின் குடல், உணவின் செரிமானத்திற்கு ஏற்ப வளர்ச்சி அடைந்திருக்காது. ஆகவே தான் நம் குடும்பங்களில் கூட ஆறு மாதத்தில் தானே அன்னம் ஊட்டும் நிகழ்ச்சி குலதெய்வ கோவில் அல்லது வீட்டு பெரியவர்கள் முன் நடைபெறுகிறது.

வீட்டில் தயாரித்த இணை உணவு ஏன் தர வேண்டும்?
வீட்டு உணவினைத் தரும் போது, அப்போது புதிதாக தயாரித்ததாகவும், தாயின் அன்பும், அக்கறையும் கலந்த உணவு என்பதால் உளவியல் ரீதியாக தாய்க்கும், குழந்தைக்கும் நெருக்கம் கூடும்.

Inai Unavu
உணவு பழகும் பருவமான 6 மாதத்திலிருந்து 10 மாதம் வரை எந்த உணவினை தருகிறோமோ அந்த ருசிக்கு குழந்தை பழகிவிடும். டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உடனடி உணவுகளை தவிர்க்கவும். சத்துள்ள கீரை, பருப்பு மற்றும் பயிறு வகைகளை இந்த வயதிலேயே அறிமுகப்படுத்தவும்.

பழவகைகள்
எந்தக் காலத்திலும் எங்கும் சுலபமாகக் கிடைக்கக்கூடிய வாழைப்பழங்களை முதலில் அறிமுகப்படுத்தலாம். மட்டி, சிறு பழம், கற்பூரவள்ளி போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தலாம்.

Fruits for babies
ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, மாதுளம் நல்லது. ஒவ்வாமை உள்ளவர்கள் எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, பூம்பழம் மற்றும் புளிப்பு மிகுந்த பழங்களை தவிர்க்கலாம். https://visitlcvalley.com/ புளிப்புரக பழங்களை ஜூஸாக மதிய வேளையில் சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தலாம்.

இணை உணவை தயாரிக்கும் போது கவனிக்க வேண்டியவை
வீட்டில் உணவினைத் தயாரிக்கும் போது காரம் இல்லாமல் செய்யவும்.

Solid food
குழந்தைக்கு பல் முளைக்கும் வரை மசித்தோ (அ) மிக்சியில் அரைத்தோ தரலாம். அதனால் உணவில் சத்துக்குறைவு ஏற்படாது. தூய்மையான குடிநீர் கொடுக்கவும். எளிதில் ஜீரணிக்கக் கூடிய பொட்டுக்கடலை, பயத்தம் பருப்பை குழந்தைகளுக்கான இணை உணவு தயாரிப்புகளில் பயன்படுத்துதல் மிக நல்லது. இணை உணவுடன் சிறிது நெய் சேர்த்தால் கூடுதல் சக்தி கிடைக்கும்.

உணவு தயாரிக்கும் போது சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். சுத்தமான கிண்ணம், ஸ்பூன் உபயோகித்து இணை உணவு ஊட்ட வேண்டும்.
Inai Unavu is nothing but the solid food given to babies after 6 months of age. Starting babies on solid foods is an important milestone in their life. Until around six months of age, breast milk meets all of baby’s nutritional needs. Even after six months when baby has started on solid foods, breast milk is still an important source of nutrition. Starting solids too early before age of 4 months can cause a baby to get too much or not enough calories or nutrients, there may be a risk of sucking food into the airway. Pureed vegetables(potatoes), pureed fruit(apple, banana), pureed chicken, semi liquid cereal.


Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas