குழந்தைகளை நல்வழிப்படுத்த பத்து வழிகள்!

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா!என்ற பழமொழிக்கேற்ப குழந்தைகளை சிறு வயதிலேயே அன்றாட கடமைகளை தவறாமல் பழக்கப்படுத்தி விட்டால், தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது போல் மறக்க மாட்டார்கள். எந்த ஒரு வேலையையும் பொறுப்புடன் செய்து முடிப்பார்கள்.

* தூங்கி எழுவதில் ஒழுங்கு முறை

Healthy Sleep

இரவு பத்துமணிக்குள் உறங்க செல்லும் வழக்கமும் அதுபோல காலை ஏழு மணிக்குள் எழுந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். இரவு உறங்கச் செல்லும் முன் நிறைய தண்ணீர் குடிக்க வைத்தால், காலையில் சிறுநீர் கழிக்கவாது நேரமே எழுந்து கொள்வார்கள்.

* திறந்த வெளியில் விளையாட்டு

சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதால் நல்ல உடல் திறனுக்கு ஓடியாடி விளையாடுவது மிகமுக்கியம். சூரிய ஒளியில் விளையாடுவது எலும்புகளுக்கு உறுதியும் உடலுக்கு வலுவையும் தருகிறது. பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் போது, குழுவினருடன் ஒத்து போதல், சமூக சூழலில் வாழும் முறைகள் பற்றி புரிதல் ஏற்படுகிறது.

* பாதுகாப்பு விதிகளை பின்பற்றுதல்

சாலை விதிகளை முறைப்படி கற்றுக்கொடுத்து அதனை குழந்தைகளை செயல்படுத்த பழக்க வேண்டும்.

மின்சாரம் மற்றும் மின்சார உபகரணங்கள் அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு முதல் உதவியை குழந்தைகள் புரியும் வகையில் எடுத்துரைப்பது அவசியம். தண்ணீர் நிரம்பிய தொட்டிகள், குளங்களில் ஏற்படும் விபத்து, கூரிய முனைகள் கொண்ட குச்சிகள், கத்தி எல்லாவற்றையும் பற்றி விளக்குங்கள்.

* பாலியல் சீண்டல்கள்

இருபால் குழந்தைகளுக்கும் “குட் டச், பேட் டச்”, என பாலியல் சீண்டல்களை புரிய வைத்து வளர்க்கவேண்டிய கட்டாயம் நிலவும் காலமிது. எவரேனும் தொல்லை கொடுத்தால் சத்தமிடுதல், தன்னால் இயன்றவரை எதிர்த்தல், பெற்றோர் ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

* சத்தான உணவு

Healthy Food

காய்கறிகள், கீரைகள், பழங்களை சாப்பிட பழக்க வேண்டும்.சத்தான உணவின் பயன்களை எடுத்துரைத்து, பெற்றோர்கள் முன்னுதாரணமாக இருந்து காட்ட வேண்டும்.

* நிறைய தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்த வேண்டும்.

* பொதுவெளியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவுற விளக்கி வளர்க்க வேண்டும்

* பகிர்ந்து உண்ண பழக்கப்படுத்த வேண்டும்.

* விலையுயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தவும், சரிவர கையாள கற்றுத்தர வேண்டும்.

* சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு

பல்துலக்குதல், காலைக்கடன்களை கழித்தல், தினசரி குளியல், சாப்பிடும் முன் கை கழுவுதல், உள்ளாடைகள் சுகாதாரம் என்று குழந்தைகளை பழக்கப்படுத்தி வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும்.


Discipline cannot be inculcated in children only by being strict or punishing them. Being a disciplinarian is not easy. It takes a lot of patience, love, and skill to instill discipline in children. A lot of parents grew up thinking that punishing the child, either physically or mentally, is the only way to discipline him. The word discipline means ‘instruction’ or ’knowledge’. Discipline is about guiding and teaching the child good behavior, while punishment is used as penalty to control the child through fear. Children has to be disciplined in playing, eating, sleeping, etc.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course