புத்தகத்தை பார்த்து செமஸ்டர் தேர்வை எழுதலாம்! இந்த பல்கலை., அறிவிப்பு!

கொரோனா தோற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு தேர்வுகள், வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது மாற்று வழியில் தேர்வுகளை நடத்தி முடிக்கலாம் என கல்லூரிகள் முடிவு செய்து, தேர்வு நடைமுறையை வெளியிட்டுள்ளது.

தற்போது மத்திய பல்கலைக் கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த தகவல் மாணவர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்னதான் தகவல் என்று பார்ப்போம் வாங்க.

College Semester Exam Announcement Results

இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகம் அதை சார்ந்த கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இறுதி பருவத் தேர்வில் புத்தகங்களைப் பார்த்தே ஆன்லைனிலும், ஆப்லைனிலும் விடையளிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

மேலும், தேர்வு அறையில் தேர்வு எழுத வரும் மாணவர்களும் கூட புத்தகங்கள், குறிப்புகள் மற்றும் பிற ஆய்வு பொருட்கள் எடு்த்து வரலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் பரிமாறாமல் இருப்பதைக் கண்காணிப்பாளர்கள் உறுதி செய்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு புதுச்சேரி மாணவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே அறிவிப்பை மற்ற பல்கலைக்கழகள் பின்பற்ற வேண்டும் என்று பிற மாநில மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas