இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி 3ஆம் கட்ட மனித பரிசோதனை!

புனேவில் இன்று கொரோனா தொற்று தடுப்பூசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனையை நடக்க இருக்கிறது. இந்த செய்தியை சசூன் மருத்துவமனையின் டீன் டாக்டர் முரளீதரர் டாம்பே பிடிசி செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார்.

சமீபத்தில் இந்த தடுப்பு ஊசி மனித பரிசோதனைக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து நேற்று பேட்டியில் டாக்டர் முரளீதரர் டாம்பே அவர்கள், ”திங்கள் கிழமை சசூன் மருத்துவமனையில் ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்ட் (Covishield) தடுப்பு ஊசி மூன்றாம் கட்ட மனித பரிசோதனை நடக்கும். 150-200 வரையிலான தன்னார்வலர்கள் இந்த பரிசோதனைக்கு தயாராக உள்ளனர், அவர்களை வைத்து தொடங்க உள்ளோம்.

Corona Virus Vaccine Medicine in India Released

விருப்பம் இருப்பவர்கள் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பரிசோதனைக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார். புனேவில் இருக்கும் பாரதி வித்யாபீடம் மருத்துவக் கல்லூரி மற்றும் கேஇஎம் மருத்துவமனைகளில் இரண்டாம் கட்ட மனித பரிசோதனை நடந்து முடிந்தது.

இந்த தடுப்பு ஊசியை பிரிட்டன்-ஸ்வீடன் பார்மா (Britain – Sweden Pharma) நிறுவனம் ஆஸ்ட்ராஜெனிகா ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து கண்டுபிடித்து, அதற்கு கோவிஷீல்ட்(Covishield) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு நரம்பு தொடர்பான பக்க விளைவு ஏற்பட்டதால் இதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை வெற்றிகரமாக முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி (Corona Vaccine) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top