செவ்வாழைப் பழத்தின் பயன்கள் பற்றி ஒரு அலசல்!

Benefits of Red Banana

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம், எவருக்கும் வாங்கும் விலையில் கிடைக்கும் ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கலாம். விலை மிகுந்த, பலன் மிகுந்த வாழைப்பழங்களில் ஒன்றான செவ்வாழைப்பழம் பற்றி பார்ப்போம்.

அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தன்னை சத்துக்களும் உள்ளடங்கிய அழகிய நிறத்தில் வசீகரிக்கும் பழம் எது என்றால் அது நம் செவ்வாழை தான்.

கேரளாவில் மற்றும் கேரள எல்லை மாவட்டமான கன்னியாகுமரியில் அதிகம் விளையும் செவ்வாழைப்பழம்.

இது சிவப்பு நிறத்தில் தடிமனாகவும், சற்று நீளமாகவும் இருக்கும், சாப்பிட ருசியும், பிரத்யேக மணமும், தொண்டை வழியாக பழம் இறங்கும் போது ஒரு வித குளிர்ச்சி தெரியும். சற்று விலை அதிகமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அவசியம் சாப்பிட வேண்டிய சத்துள்ள பழம்.

கண்களுக்கு ஆரோக்கியம்

Red Banana benefits

விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்பார்வை ‌கோளாறுகள் அதிலும் மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பார்வைத்திறன் மேம்படுகிறது தினமும் காலை மற்றும் இரவு உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து ஒரு செவ்வாழைப்பழம் என்று தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர நோய் நீங்கும்.

பல் நோய்கள்
செவ்வாழைப்பழத்தில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பல்வலி, பல் வேர்கள் வலுவிழந்து ஆடுதல் போன்ற வியாதிகளை செவ்வாழைப்பழம் குணமாக்கும்

மலச்சிக்கல்
மலச்சிக்கல் தான் வியாதிகளுக்கு அஸ்திவாரம் நார்ச்சத்து மிகுந்த செவ்வாழைப் பழம் மலச்சிக்கலை போக்கும். செவ்வாழைப்பழம் இரவு உணவிற்கு பின் ஒரு மணிநேரம் கழித்து சாப்பிட்டு வர செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மலச்சிக்கல், வாயு தொல்லை வராமல் தடுக்கலாம்.

மலட்டுத்தன்மையை நீக்கும்
திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் இருவரும் செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் விந்தணுக்கள் பெருகி கர்ப்பம் ஏற்படலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம்
எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை தன்னகத்தே கொண்டுள்ளதால் செவ்வாழைப்பழம் உண்ணும் போது எலும்புகள் வலுவடையும். அதனால் தான் எல்லா வயதினருக்கும் ஏற்ற கனி என்கிறோம்.

வளரும் குழந்தைகளுக்கு எலும்புகளின் வளர்ச்சிக்கு அதிகளவு கால்சியம் தேவைப்படுகிறது. ஆகவே குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினம் ஒரு செவ்வாழையைக் கொடுங்கள்.

உடல் எடையை பராமரிக்க
செவ்வாழையில் கலோரிகள் குறைவு. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் காலை உணவாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர, பசி மட்டுப்படும். இதனால் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

நேர்எதிர் பலன்களை கொண்டுள்ள கனி செவ்வாழைப்பழம் தான். செவ்வாழைப்பழத்தை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும், உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

நரம்புத் தளர்ச்சி நீங்க
நரம்புத் தளர்ச்சி மனிதனை செயலற்று போக வைத்து விடும். நரம்புகள் நன்றாக இருந்தால் தான் நாம் எந்தச் செயலையும் சுறுசுறுப்பாக செய்ய முடியும். நரம்புத் தளர்ச்சி கொண்டவர்களின் கை, கால்கள் நடுக்க மேற்படும்.

நரம்பு தளர்ச்சி காரணமாக, ஆண்களுக்கு ஆண்மை தன்மை குறைவு ஏற்படும், தாம்பத்தியம் பாதிக்கப்படும் இவர்கள் உற்சாகம் கொள்ள உதவுவது செவ்வாழைப்பழம்.

பலரும் அரிதாகவே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

“வைத்தியருக்கு கொடுக்கும் காசை, வாணிகனுக்கு கொடு “, என்பது போல இதன் விலையைக் கண்டு அதிர்ச்சி அடையாமல் கண்ணில் படும் போதெல்லாம் வாங்கி சாப்பிடுங்கள்.


Red banana (sevvazhai in tamil) is one of the little expensive and highly beneficial banana types. It contains essential nutrients needed for physical health. It highly grown in the state of Kerala and its border district, Kanyakumari. Its richness in Vitamin A is used to treat eye disorders. It is also used to treat dental problems, Constipation, Infertility, Neurasthenia. Intake of red banana helps to maintain bone health and health during pregnancy.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women