ஜிமிக்கி கம்மல்! ஜிமிக்கி கம்மல்!

Earing

பெண்கள் என்றாலே அழகு, அழகு என்றால் ஒப்பனை, ஒப்பனை என்றால் அதில் நகைகளும் உண்டு. எத்தனை விலையுயர்ந்த ஆடைகள் சூட்டியிருந்தாலும் காதில் காதணி ஏதாவது அணிந்து இருந்தால் மட்டுமே அந்த பெண்ணின் அலங்காரம் நிறைவு பெறும்.

காதணிகளின் அழகு

கேள்விக்குறி ( ? ) போன்ற பெண்ணின் காதுகளுக்கு கீழ் முற்றுப்புள்ளி வைத்தது போலத் தான் காது கம்மல். காதணிகள் பலவித டிசைனில் கிடைக்கிறது. ஒவ்வொரு பெண்ணின் ரசனையும் வெவ்வேறு, ஒவ்வொருவருக்கும் மனம் விரும்பும் டிசைனில் காதணி கிடைக்கும் வகையில் டிசைன்கள் கொட்டி கிடைக்கிறது. இலை, மயில், பூ என விதவிதமான டிசைனில், ரகத்தில் கிடைக்கிறது.

காதணிகளின் வகைகள்

புதிது புதிதாக டிசைன்களில் நகை வடிவமைப்பாளர்கள் காதணிகள் கொண்டு வந்தாலும் பாரம்பரிய டிசைனில் உள்ள மோகம் பெண்களுக்கு தீருவதில்லை. தோடு, கம்மல், ஜிமிக்கி, லோலாக்கு, தொங்கல், வளையம், மொட்டு கம்மல் அப்பப்பா இன்னும் நிறைய வருமே!

ஜிமிக்கி

எத்தனை காதணிகள் போட்டாலும் ஒரு மங்களகரமான அழகை பெண்களுக்கு தருவது ஜிமிக்கி தான்.சுபநிகழ்ச்சிகளுக்கான ஆடை அணிகலன்களுள் ஜிமிக்கியும் உண்டு. இந்தியா முழுவதும் விரும்பி அணியும் அணிகலன் இது.

ஜிமிக்கிகளின் வகைகள்

Jhumka Varieties

ஜிமிக்கிகளை அதன் வேலைப்பாடுகளை கொண்டே பெரும்பாலும் வகைப்படுத்தப்படுகிறது. முத்து ஜிமிக்கி, கல் ஜிமிக்கி, அடுக்கு ஜிமிக்கி, குடை ஜிமிக்கி, தேர் ஜிமிக்கி, இவை மட்டும் அல்லாமல் நாட்டிய மகளிருக்கான மயில் ஜிமிக்கி, அன்னப்பறவை ஜிமிக்கி தனி ரகம்.

காஷ்மிரி ஜூம்கா (காஷ்மீர் ஜிமிக்கி)

Jhumka

காது மாட்டலுடன் கூடிய காஷ்மீர ஜிமிக்கி தனி அழகு. வெள்ளி நகைகளையே அதிகம் விரும்பும் வட இந்திய மக்களின் அழகிய அணிகலன் இது.

உலோகமும் முத்துக்களும் கலந்து செய்த கொள்ளை அழகு ஜீம்காக்கள்.

பழைய ஹிந்தி திரைப்படங்களில் ஷர்மிளா தாகூர், ஐசுரு, ரேகா என அத்துணை பேரின் காதுகளை அலங்கரித்தது.

அர்த்தம் சரியில்லாத ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமாகும் முன்பே ஜிமிக்கி கம்மல் நம்மிடையே பிரபலம் தான்.


Women’s beauty is not complete without an earring. An earring is a piece of jewelry attached to the ear via a piercing in the earlobe or another external part of the ear. Metals such as silver, gold, diamond, platinum are used to make earring which includes jimikki kammal (jhumka). Nowadays it is made using silk threads too. There are different types of jimikki such as stone stone jimikki, umbrella jimikki, peacock jimikki, etc. Kashmir Jhumka is a different type in which a chain is attached with Jhumka earring.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women