தென்னிந்திய சுப நிகழ்ச்சிகளில் பூக்கள் இல்லாமல் இருக்குமா? விழா மேடை, விழாவிற்கு வரும் பெண்கள், விழா நாயகி என பூக்களால் அலங்காரம் கொண்ட சுப நிகழ்ச்சிகள் தான் தென்னிந்திய நிகழ்வுகள்.
சடை அலங்காரம் என்பது விழா நாயகிக்கு அதுவும் மணமகள், பூப்புனித நீராட்டு விழா நாயகி, சீமந்தம் எனில் தாய்மை அடைந்த பெண்ணுக்கு என அழகுபட ஜடை அலங்காரம் செய்திருப்பர்.
பூச்சடை அலங்காரம்
வெறும் பூக்கள் மட்டுமல்ல ஜடைபில்லைகள், தங்க ஊசிகள், முத்து மணிகள் கொண்டு ஜடை அலங்காரம் செய்வது உண்டு.
மணப்பெண் அலங்காரத்தில் பூச்சடை அலங்காரமே தலையானது. மணப்பெண்ணை தேவதைப்போல ஜொலிக்க வைப்பது சடை அலங்காரம்.
வளை சடை அலங்காரம்
பொம்மை சடை அலங்காரம்
டிரை நட்ஸ் (dry nuts) கொண்டு கூட சடை அலங்காரம் என்பது இன்றைய பெண்களின் ஃபேஷன் மேனியா. கலாச்சார பெருமைகள் நிறைந்த தமிழகத்தில் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்கள் கூட அழகும் ரசனையும் உடையதாக உள்ளது.
நீண்ட தலைமுடி இன்று காண அரிதாக இருந்தாலும், இன்றைய நவீன பெண்கள் பூச்சடை அலங்காரத்தை விரும்புவது உணர்த்துவது என்னவென்றால் நம் இரத்தத்தில் ஊறிப்போன விஷயம் நம் கலாச்சாரம் என்பது தான்.
Poo Jadai (Floral design) Alangaram is decorating braid with flowers. It differs for each function like seemantham, wedding, reception, etc. The overall South Indian bridal make-over looks incomplete without flowers in Hairstyle. We have unique jadai alangaram for South Indian bride. Bangle jada alangaram is mainly used for seemantham/valaikappu. Readymade poo jadai called bommai jadai is also bought and fit in braid. Rose and jasmine flower were mostly used earlier. In recent years, “jada billalu” or “jadanagam” is mostly preferred, which is a braid accessory.