அழகிற்கு அழகு சேர்க்கும் செம்பருத்தி பூ!

Hibiscus flower for Beauty

நம் வீட்டு தோட்டத்தில் அழகு சேர்க்கும் மலர்களில் செம்பருத்தியும் ஒன்று. எளிதில் வளரும் அதே சமயம்  அழகான மலர். இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒற்றை இதழ், அடுக்கு செம்பருத்தி என இருபெரும் பிரிவுகளாக உள்ளது.

நிறத்தின் அடிப்படையில், மிளகாய் செம்பருத்தி, ஜீம்கா செம்பருத்தி என பல செம்பருத்தி வகைகள் இருந்தாலும், மருத்துவ குணங்கள் நிறைந்த சிவப்பு செம்பருத்தி தான் சிறப்பு.

செம்பருத்தி மலரை ஆயூர்வேதம் கொண்டாடுகிறது. கூந்தல் தயாரிப்புகளிலும், இதய வலுவை தரும் லேகியங்களிலும் செம்பருத்தி பூ உள்ளது. சருமபராமரிப்புகளிலும் கூட செம்பருத்தி இடம்பெற்றுள்ளது. “தங்க புஷ்பம்”, என்று கொண்டாடுகிறது.

செம்பருத்தியை பயன்படுத்தும் முறை
செம்பருத்தி மலரின் இதழ்களை மட்டும் பறித்து பயன் படுத்துகின்றனர். அதன் நடுவில் உள்ள மஞ்சள் நிற சூழ்முடியை பெரும்பாலான பாரம்பரிய மருத்துவ முறைகளில் தவிர்க்கின்றனர். மஞ்சள் நிற சூழ்முடி கர்ப்பத்தடையை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்கின்றனர்.

செம்பருத்தி பவுடர்
செம்பருத்தி முழு மலர்களை சூரிய ஒளியில் காயவைக்க வேண்டும். நான்கு நாளில் நன்கு காய்ந்துவிடும். பிறகு இதனை மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை கூந்தல் வளர்ச்சிக்கும், எப்படி உபயோகப்படுத்தலாம் என்று பார்ப்போம்.

* சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சூடாக்கி அதில் இந்த பொடியை போட்டு அடுப்பை அணைத்து விடவும். இந்த எண்ணெயை தலைக்கு தடவி வரலாம்.

* கூந்தல் வளர்ச்சி தைலங்கள் அனைத்திலும் இதனை சேர்க்கலாம்.

* தயிர், எலுமிச்சை சாறு உடன் இந்த பொடியை சேர்த்து தலையில் தேய்த்து குளிப்பது இளநரையை குறைக்கும்.

* கொதிக்கும் நீரில் இந்த பொடியை போட்டு பிறகு தட்டு போட்டு பாத்திரத்தை மூடவும். இளம்சிவப்பு நிற குடிநீரில் தேன் கலந்து பருகலாம்.

செம்பருத்தி டீ

Hibiscus Flower tea

செம்பருத்தி மலர்களை பறித்து, சூழ் முடிகளை நீக்கி விட்டு, கொதிக்கும் நீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து பார்த்தால் சிவப்பு நிறத்தில் கண்ணைக் கவரும் டீ தயார். இதில் இரண்டு சொட்டுக்கள் எலுமிச்சை சாறு சேர்த்து இனிப்புக்கு தேன் சேர்த்து பருகலாம். வாரம் ஒரு முறை வித்யாசமான டீ.

வெறும் கூந்தல் வளர்ச்சி, சருமத்திற்கு மெருகேற்றும் மலர் என்பதையும் தாண்டி பல்வேறு விதமான மருத்துவப் பயன்கள் கொண்டுள்ளது செம்பருத்தி.

இதயத்திற்கு வலுவூட்டும், இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி, புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.செலவில்லாத சிவப்பு பானத்தை அடிக்கடி பருகுவோம்!


Hibiscus flower is used in Ayurveda medicines for skin and hair care. It strengthens heart muscles. Hibiscus powder comes from the crushed flower petals of the Hibiscus plant. Hibiscus tea helps to mange blood pressure, protects liver, relieves menstrual cramps, improves digestion. It is also used to lower body temperature, treat heart and nerve diseases, and as a diuretic to increase urine production. Hibiscus oil is great for hair growth & shine. Prepare healthy hibiscus recipe using the above procedure.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top